மாங்கல்யம் ஏந்திய மாணவியர்! ஆறு மாதங்களில் 57 பேர் ..... உறவினர்கள் மீது வழக்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2021
22:31

கோவை : கோவையில் கடந்த, ஜன., முதல் தற்போது வரை, 57 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், சம்மந்தப்பட்ட பெற்றோர், உறவினர், மாப்பிள்ளை, மாப்பிள்ளை வீட்டார் மீது வழக்கு பதிவு செய்யும் பணி, தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



குழந்தை திருமண தடை சட்டத்தின் படி, பெண்ணுக்கு, 18 வயதும், ஆணுக்கு, 21 வயதும் பூர்த்தியாக வேண்டும். இவ்வயது பூர்த்தியாகாமல் நடைபெறும் அனைத்து திருமணங்களும், சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.கோவையில், 2019ம் ஆண்டு மொத்தமாகவே, 58 குழந்தை திருமண புகார் பதிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போது ஜன., முதல் தற்போது வரை மட்டும், 57 புகார்கள் பதிவாகியுள்ளது, சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடுத்து நிறுத்தாத திருமணங்கள் எவ்வளவோ என, அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.



இது குறித்து, மாவட்ட சமூகநலத்துறை அலுவலர்தங்கமணி கூறியதாவது:கோவையில், தற்போது வரை பெறப்பட்ட, 57 புகார்களில், 17 திருமணங்கள் நடந்து முடிந்த பின்பே தெரியவந்தது. 17 புகார்களில் சம்மந்தப்பட்ட மாப்பிள்ளை, பெண்ணின் பெற்றோர், உடன் பிறந்தோர், மாப்பிள்ளை வீட்டார், திருமணத்தில் பங்கேற்றோர் அனைவர் மீதும் காவல் நிலையத்தில், வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது.இம்மாதம் மட்டும், இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், ஒரு மாணவி 9வதும், மற்றொருவர் 10வதும் படிப்பவர்கள். குழந்தை திருமணம் நடப்பது குறித்து, உடன் படிக்கும் மாணவ, மாணவியர், உறவினர்கள், அண்டை வீட்டார், ஆசிரியர் உள்ளிட்டோர், 1098, 181 ஆகிய கட்டணமில்லா எண்களில் புகார் செய்யலாம்.



காவல்நிலையம், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூகநலத்துறை அலுவலகம், பஞ்சாயத்து உறுப்பினர்கள் என, எங்கு தகவல் தெரிவித்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் அளிப்பவர்களின் விபரம், ரகசியம் காக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.பாதுகாப்பு யார் தருவார்?சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த, பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் தாய் கூறுகையில், 'எனக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் 10ம் வகுப்பு படிக்கிறாள். கணவர் மூன்றாண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.ஊரடங்கு காரணமாக போதுமான வருமானமும் இல்லை.



பிள்ளைகளுக்கும் படிப்பு இல்லை. கொரோனாவால் எனக்கு அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டால், என் பிள்ளைகளின் நிலையை நினைத்து, திருமணத்திற்கு ஏற்பாடு செய்தேன். அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விட்டனர். கட்டாயம் பிள்ளைகளை படிக்க வைப்பேன் என எழுதி வாங்கியுள்ளனர். உதவி செய்வதாகவும் கூறியுள்ளனர்' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
17-ஜூன்-202119:23:33 IST Report Abuse
S. Narayanan பெற்றோர் ருக்கு வேலை இல்லை சம்பளம் இல்லை குடும்பம் நடத்த தினருகிரார்கள். அதனால் மாணவர்கள் படிப்பு இல்லாததால் குடும்ப நிலை எண்ணி கிடைத்த வேலைக்கு சென்று சம்பாதிக்க நினைக்கிறார்கள். பெற்றோர்கள் நாளை என்ன நடக்குமோ என்ற பயத்தில் பெண்களுக்கு வயது வரும் முன்பு திருமணம் செய்ய நினைக்கிறார்கள். அதனால் அவர்களை பயமுறுத்துவது விட்டு விட்டு அவர்களுக்கு அரசு எப்படி உதவ முடியும் என்பதை ஆராய்ந்து செய்வதே ஒரு உண்மையான அரசாக இருக்க முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X