வழி கேட்ட போலீசாரை தாக்கிய அரசு ஊழியர் உட்பட இருவர் கைது | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
வழி கேட்ட போலீசாரை தாக்கிய அரசு ஊழியர் உட்பட இருவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2021
23:16

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி அருகே வழி கேட்ட போலீஸ்காரரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த, அரசு ஊழியர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ராம்கி, 34; இவர், தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணிபுரிகிறார்.நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் ராம்கி தனது காரில் பழைய சிறுவங்கூருக்கு பணி நிமிர்த்தமாக சென்றார்.அப்போது, ரங்கநாதபுரம் பிரிவு சாலை அருகே காரை நிறுத்தி அங்கிருந்த இருவரிடம் பழைய சிறுவங்கூருக்கு எப்படி செல்வது என கேட்டுள்ளார்.அப்போது, ஏற்பட்ட தகராறில், ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த தென்னரசு, 43; அரசு பஸ் டிரைவர், அரியபெருமானுாரைச் சேர்ந்த சங்கர், 41; ஆகிய இருவரும் ராம்கியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து தென்னரசு, சங்கர் ஆகியோரை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X