மணல் கடத்தல்: ஜே.சி.பி., பறிமுதல் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
மணல் கடத்தல்: ஜே.சி.பி., பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2021
23:17

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி அருகே மணல் கடத்திச் சென்ற லாரி மற்றும் ஜே.சி.பி., இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் ராமன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிறுவங்கூர் புளியந்தோப்பு வழியாக மணல் கடத்தி வந்த லாரி, அதனைத் தொடர்ந்து வந்த ஜே.சி.பி., இயந்திரத்தை நிறுத்தினர்.வாகனங்களை நிறுத்திய டிரைவர்கள் இருவரும் தப்பியோடினர்.உடன், போலீசார் 4 யூனிட் மணலுடன் லாரி மற்றும் ஜே.சி.பி., இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். மேலும், வழக்குப் பதிந்து தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X