பெண் வி.ஏ.ஓ.,வுக்கு மிரட்டல் காய்கறி வியாபாரி மீது வழக்கு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
பெண் வி.ஏ.ஓ.,வுக்கு மிரட்டல் காய்கறி வியாபாரி மீது வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2021
23:19

திண்டிவனம்-திண்டிவனம் அருகே பெண் வி.ஏ.ஓ., மீது வேன் ஏற்றி கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.திண்டிவனம் அடுத்த புத்தனந்தல், தட்டார தெருவைச் சேர்ந்தவர் செல்வவினாயகம், 35; மினி வேனில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 11ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து அவர், சுகாதாரத்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.நேற்று காலை வீட்டை விட்டு வெளியில் வந்த செல்வவினாயகம், குடிபோதையில் வெள்ளிமேடுபேட்டை வி.ஏ.ஓ., அலுவலகம் சென்று, அங்கு பணியில் இருந்த வி.ஏ.ஓ., பிரியமித்திரையிடம், 58; 'எனக்கு கொரோனா இருப்பதாக எப்படி சொல்லலாம் எனக் கேட்டு அவரிடம் தகராறு செய்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்தனர்.ஆனால் அவர், திடீரென வேனை ஸ்டார்ட் செய்து, வி.ஏ.ஓ., மீது இடித்தார். இதில், அவர் லேசான காயமடைந்தார்.இது குறித்து பிரியமித்திரை கொடுத்த புகாரின் பேரில், வெள்ளிமேடுபேட்டை போலீசார், செல்வவினாயகம் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X