நிலம் மற்றும் வீடு அபகரிப்பு கலெக்டரிடம் மூதாட்டிகள் மனு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2021
23:20

விழுப்புரம்-நிலம் மற்றும் வீட்டை அபகரித்துக் கொண்டதாக, கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு மூதாட்டிகள் மனு கொடுத்தனர்.செஞ்சி தாலுகா, சோழங்குணத்தைச் சேர்ந்தவர் தனபால் மனைவி கண்ணம்மாள், 85; மனு:எனது நிலம் மற்றும் வீடுகளை மகன் வழி பேத்திகள் இரண்டு பேருக்கு, நான் இறந்த பிறகு தான் அனுபவிக்க வேண்டும் என எழுதிக் கொடுத்தேன். அதன் பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு முன் இரண்டு பேத்திகள் மற்றும் அவரது கணவர்கள் என்னை அடித்து விரட்டி நிலம், வீட்டை அபகரித்துக்கொண்டனர். எனது நிலம் மற்றும் வீட்டை மீட்டுத்தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.இதேபோன்று, மேல்மலையனுாரைச் சேர்ந்த மண்ணப்பிள்ளை மனைவி கோவிந்தம்மாள், 62; கொடுத்த மனு:எனக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். என் கணவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். எனது கணவர் பெயரில், இருந்த நிலம் மற்றும் வீட்டை மகன்கள் எழுதி வாங்கிக்கொண்டு எங்களை வீட்டைவிட்டு துரத்திவிட்டனர். எனவே, வீடு மற்றும் நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுக்களைப் பெற்ற கலெக்டர் மோகன், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து விசாரித்து, நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X