கார் மோதி ஒருவர் பலி | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
கார் மோதி ஒருவர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2021
23:21

மரக்காணம்-மரக்காணம் அருகே கார் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.சின்ன முதலியார்சாவடி எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் மணிகண்டன், 26; இவர் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த சதீஷ், 38; என்பவருடன் தனது பைக்கில் புதுச்சேரி நோக்கிச் சென்றார். சின்ன முதலியார்சாவடி சந்திப்பில், எதிரே வந்த டாடா இண்டிகா கார், மணிகண்டன் பைக் மீது மோதியது.இதில், படுகாயமடைந்த இருவரும், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, சிகிச்சை பலனின்றி சதீஷ் நேற்று இறந்தார். கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X