9 துணை தாசில்தார்கள் இடமாற்றம் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
9 துணை தாசில்தார்கள் இடமாற்றம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2021
23:22

விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் 9 துணை தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மேல்மலையனுார் முன்னாள் தேர்தல் துணை தாசில்தார் வெங்கடேசன் செஞ்சி மண்டல துணை தாசில்தாராகவும், விழுப்புரம் முன்னாள் மண்டல துணை தாசில்தார் ராஜசேகர் திண்டிவனம் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.விழுப்புரம் கலெக்டர் அலுவலக 'ஐ' பிரிவு முன்னாள் தலைமை உதவியாளர் சுபாஷினி கலெக்டர் அலுவலக 'ஆ' பிரிவு கண்காணிப்பாளராகவும், வானுார் முன்னாள் தலைமையிடத்து துணை தாசில்தார் ராதாகிருஷ்ணன் கண்டாச்சிபுரம் வட்ட வழங்கல் அலுவலராகவும், விழுப்புரம் கனிமம் மற்றும் சுரங்கம் தனித்துணை தாசில்தார் நாராயணமூர்த்தி மரக்காணம் தேர்தல் துணை தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதேபோன்று, விழுப்புரம் கலெக்டர் அலுவலக 'ஆ' பிரிவு கண்காணிப்பாளர் விமல்ராஜ் மாவட்ட கனிமம் மற்றும் சுரங்கம் தனித்துணை தாசில்தாராகவும், திருவெண்ணெய்நல்லுார் மண்டல துணை தாசில்தார் நீலவேணி விழுப்புரம் கலெக்டர் அலுவலக 'இ' பிரிவு கண்காணிப்பாளராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.திருவெண்ணெய்நல்லுார் தேர்தல் துணை தாசில்தார் ரகுராமன் அங்கு மண்டல துணை தாசில்தாராகவும், செஞ்சி மண்டல துணை தாசில்தார் கோவிந்தராஜன் திருவெண்ணெய்நல்லுார் தேர்தல் துணை தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X