தீவிரம்: மாணவர்களுக்கான பாட புத்தகங்கள் அனுப்பும் பணி...பள்ளிகள் திறப்பிற்கு கல்வித்துறை அதிகாரிகள் தயார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2021
23:22

விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக, பாட புத்தகங்கள் அனுப்பும் பணியில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டியுள்ளனர்.



தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இதனால், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன.இந்நிலையில், ஆண்டுதோறும் ஜூன் மாதம் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா பாதிப்பால், மாணவர்கள் வீட்டில் இருந்து கல்வி பயில கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி முதல் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது.அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 233 மாணவர்களுக்கு பாட புத்தகம் மற்றும் புத்தகப் பை வழங்கப்பட்டன.



இந்நிலையில், தமிழகத்தில் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிகள் திறந்து பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டது. இதையடுத்து, கொரோனா தொற்று அதிகரித்ததால், மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், கடந்த 14ம் தேதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட அலுவலக பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டது.அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,149 தொடக்கப் பள்ளிகள், 265 நடுநிலைப் பள்ளிகள், 191 உயர்நிலைப் பள்ளிகள், 199 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 1,804 பள்ளிகள் கடந்த 14ம் தேதி திறக்கப்பட்டன. பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மட்டும் செல்கின்றனர்.



இவர்கள், இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளான, மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தகம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் தொடர்பான பதிவேடுகள் தயார் செய்தல். மாற்றுச் சான்றிதழ் பெறும் மாணவர்களுக்கு, மாற்றுச் சான்றிதழ் வழங்குதல். மாணவர்களுக்கு வருகை பதிவேடு தயார் செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி, காமராஜர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இப்பணிகளை சி.இ.ஓ., கிருஷ்ணப்பிரியா நேரில் ஆய்வு செய்தார்.அதன்படி, மாவட்டத்தில் 1ம் வகுப்பில் 14 ஆயிரத்து 900 மாணவர்கள், 2ம் வகுப்பில் 14 ஆயிரத்து 450, மூன்றாம் வகுப்பில் 15 ஆயிரத்து 722, நான்காம் வகுப்பில் 16 ஆயிரத்து 965, ஐந்தாம் வகுப்பில் 18 ஆயிரத்து 700, ஆறாம் வகுப்பில் 23 ஆயிரத்து 550, ஏழாம் வகுப்பில் 21 ஆயிரத்து 350, எட்டாம் வகுப்பில் 22 ஆயிரம், ஒன்பதாம் வகுப்பில் 20 ஆயிரத்து 662, பத்தாம் வகுப்பில் 21 ஆயிரத்து 643, பிளஸ் 1 வகுப்பில் 19 ஆயிரத்து 50, பிளஸ் 2 வகுப்பில் 18 ஆயிரத்து 350 என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 342 மாணவர்கள் உள்ளனர்.



இந்த மாணவர்களுக்கான அரசின் விலையில்லா புத்தகங்கள் பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. மேலும், கூடுதலாக மாணவர் சேர்க்கை எதிர்ப்பார்க்கப்படுவதால், ஒவ்வொரு வகுப்பிற்கும் 1000 விலையில்லா புத்தகங்கள் கூடுதலாக பெறப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X