முககவசம், கையுறை தட்டுப்பாடு: திட்டக்குடி மருத்துவக் குழுவினர் அவதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2021
23:26

திட்டக்குடி--திட்டக்குடி தாலுகாவில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் முகக்கவசம், கையுறை உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் மருத்துவக்குழுவினர் மற்றும் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகின்றனர்.திட்டக்குடி அரசு கல்லுாரியில் கடந்த ஒரு மாதமாக கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டது. அங்கு முககவசம், கையுறைகள், குப்பைத் தொட்டிகள், சுடுநீர் இயந்திரங்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் கடுமையாக அவதியடைந்தனர். பயன்படுத்தப்பட்ட முகவசம், கையுறைகள், மருத்துவ கழிவுகள் முறையாக சேகரித்து அகற்றாததால் பணியில் இருந்த மருத்துவப் பணியாளர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதித்தனர். இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு மங்களூர் வட்டார சுகாதாரத்துறை அதிகாரிகள் கடிதம் மூலம் தகவல் தெரிவித்தும் உபகரணங்கள் கிடைக்கவில்லை.தற்போது மா.புடையூர் அரசு மாதிரிப்பள்ளி மாணவர் விடுதியில், முதற்கட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள 100 பேருக்கு சிகிச்சை அளிக்கும் கொரோனா சிகிச்சை மையம், திட்டக்குடி அரசு கல்லுாரியில் 50 ஆக்சிஜன் வசதியுடைய படுக்கைகளுடன் 150 படுக்கை வசதி கொண்டு கொரோனா மருத்துவமனையாகவும், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் 60 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஏற்பாடு நடக்கிறது. சிகிச்சை அளிக்கும் மூன்று இடங்களிலும் முககவசம், கையுறைகள் உட்பட மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X