ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக 6 பேர் மீது வழக்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2021
23:44

சென்னை--கல்லுக்குட்டை, அரசு இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான தாக்குதல் சம்பவத்தில், வழக்கறிஞர் உட்பட, 6 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.பெருங்குடி, கல்லுக்குட்டையில், 150 ஏக்கர் அரசு இடம் உள்ளது. இந்த இடத்தை, தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் ஆக்கிரமித்து, பிளாட் போட்டு, 2 முதல், 5 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர்.தற்போது, 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ''எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், அனைவருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என, சட்டசபை தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்தனர்.ஆட்சி மாற்றம் காரணமாக, அனைவருக்கும் பட்டா கிடைக்கும் என்ற நம்பிக்கையில், காலி இடங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் ஏற்கனவே குடியிருப்போரை காலி செய்யும் நடவடிக்கையில், தி.மு.க.,வைச் சேர்ந்த சிலர் இறங்கி உள்ளனர்.சில தினங்களுக்கு முன், 2010ம் ஆண்டு ஆக்கிரமித்து விற்பனை செய்த இடத்தை, திரும்பி ஒப்படைக்க கேட்டுள்ளனர்.இது தொடர்பாக நடந்த தகராறில், போலீசார் கண் முன்னே, அப்பகுதி பெண்கள், துடைப்பம், விறகு கட்டையால், தி.மு.க.,வினரை தாக்கி விரட்டியடித்தனர்.துரைப்பாக்கம் போலீசார் விசாரித்து, நேற்று, இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, அமுதா என்பவரின் புகாரில், வழக்கறிஞர் ரமேஷ் மணிகண்டன், ராஜலிங்கம், சத்யா ஆகியோர் மீதும்; சத்யா என்பவர் புகாரில், அமுதா, 37, ராமு, 40, ஜோஸ்வா, 45, ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X