மூன்றாவது அலையை தடுக்க மக்களால்... முடியும்! அரசு மருத்துவமனை டீன் நம்பிக்கை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

18 ஜூன்
2021
03:32
பதிவு செய்த நாள்
ஜூன் 18,2021 01:38

கோவை:கொரோனா இரண்டாவது அலையில் இருந்து, ஒருவழியாக மீண்டு வருகிறோம். அடுத்ததாக மூன்றாவது அலையும் வரவிருப்பதாக, மருத்துவ நிபுணர்கள் கூறி வரும் நிலையில், மூன்றாவது அலை வருவதும், வராமல் தடுப்பதும் மக்கள் கைகளில்தான் உள்ளது; அரசு விதிமுறைகளை பின்பற்றி நடந்தால், மூன்றாம் அலையை தவிர்த்து விடலாம் என்கிறார், கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா.



அவருடன் நடத்திய கலந்துரையாடலில் இருந்து!


கொரோனா தொற்று குறைந்து வருகிறதே... படுக்கைகள் இன்னும் 'புல்' ஆகதான் உள்ளதா?கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்கென, ஆக்சிஜன், தீவிர சிகிச்சைப்பிரிவுடன் சேர்த்து மொத்தம் 1,400 படுக்கைகள் உள்ளன. பாதிப்பு குறைந்து விட்டதால், தற்போது 750க்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாகவுள்ளன.


டாக்டர்கள், நர்ஸ்கள் பற்றாக்குறை சரியாகி விட்டதா?இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை, ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அப்போதுதான் சிகிச்சை அளிப்பதில் சிரமம் இருந்தது. ஆனால், தற்போது நாள் ஒன்றுக்கு, 65 டாக்டர்கள், 110 நர்ஸ்கள் வரை பணியில் இருக்கின்றனர். சிரமம் இல்லை.


பிற சிகிச்சைகள் அளிப்பது எப்போது?விபத்தில் காயமடைந்தவர்கள், இருதயம், மகப்பேறு உள்ளிட்ட அவசர அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திட்டமிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய, அறுவை சிகிச்சைகள்தான் நிறுத்தப்பட்டுள்ளன. ஊரடங்கு முடிந்து கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்தால், பிற சிகிச்சைகள் அளிக்கும் பணி தொடங்கி விடும்.கருப்பு பூஞ்சைக்கு, எத்தனை பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்?கருப்பு பூஞ்சை அறிகுறிகளுடன், 104 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு சிகிச்சை அளிக்க தேவையான, ஆம்போடெரிசின் - பி உள்ளிட்ட மருந்துகள் ஆர்டர்கள் கொடுக்கப்பட்டு தயாராகி விட்டது. நாளை (இன்று) வந்துவிடும்.


கொரோனாவால் உயிரிழப்பவர்களுக்கு, நிமோனியா எனக்கூறி உடல்கள் ஒப்படைக்கப்படுவதாக கூறப்படுகிறதே?கொரோனாவால் மட்டுமே ஒரு நபர் உயிரிழந்தால், கட்டாயம் கொரோனா இறப்பு என்றுதான் எழுதி கொடுக்கப்படும். அதே சமயம், கொரோனா அல்லாமல் இருதயம், நீரிழிவு, கேன்சர், நிமோனியா போன்ற பாதிப்புகளால், உயிரிழப்பவர்களின் உடல்கள் மட்டுமே, அவ்வாறு ஒப்படைக்கப்படுகின்றன.


கொரோனா மூன்றாம் அலை வருமா...அதற்கு அரசு மருத்துவமனை தயாராக இருக்கிறதா?கொரோனா மூன்றாம் அலை வருவதும், வராமல் தடுப்பதும் மக்கள் கையில்தான் உள்ளது. அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் தவிர்த்து விடலாம். அதே சமயம், மூன்றாம் அலையை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளோம்.


மூன்றாம் அலை வந்தால், எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், எந்த வயதினரை அதிகம் தாக்கும்?முதல் அலையின்போது முதியவர்கள்,இரண்டாம் அலையில் இளைஞர்கள், மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட, வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவுகிறது. எனவே, கொரோனா நோய் தொற்றுக்கான குழந்தைகள் நலப்பிரிவில், 300 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு அமைக்கும் பணி நடக்கிறது.இதில், தீவிர சிகிச்சை பிரிவு, ஆக்சிஜன், செயற்கை சுவாசம் உட்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.


குழந்தைகளுக்கு தேவைப்படும் சிறு வென்டிலேட்டர்கள், மாஸ்க்குகளை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு, ஆர்டர் செய்துள்ளோம். கூடுதல் தேவைப்பட்டால் தருவித்துக் கொள்ளலாம்.மூன்றாம் அலையில், அறிகுறிகள் ஏதேனும் மாறுமா?அறிகுறி என்று பார்த்தால், ஆரம்பத்தில் நுரையீரல் பாதிப்பு இருந்தது. தற்போது தலைவலி, வயிற்றுப்போக்கு கூட, கொரோனா அறிகுறிகளாக இருக்கின்றன. எனவே, அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பதை, இப்போது கணிக்க முடியாது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X