கொரோனா பாதிப்பு குறைந்ததால் நிம்மதி: 4 தாலுகாக்களில் நேற்று 64 பேருக்கு 'பாசிட்டிவ்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
03:20

பொள்ளாச்சி;பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, ஆனைமலை ஆகிய தாலுகாக்களில், 64 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, கே.வி.ஆர்., நகர், அமைதி நகர், குமரன் நகர் இரண்டாவது லே -- அவுட், ஜெயலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதியில், எட்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, சமத்துார், பொன்னாச்சியூர், நாட்டுக்கல்பாளையம், கோமங்கலம்புதுார், குஞ்சிபாளையம், அம்மேகவுண்டனுார் உள்ளிட்ட பகுதியில் தலா ஒருவர்; கோலார்பட்டி, ஆவல்சின்னாம்பாளையத்தில் தலா இருவர்; ஜமீன் ஊத்துக்குளியில் மூவர், என, மொத்தம், 13 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏரிப்பட்டி, ஓரக்களியூர், திப்பம்பட்டி, ஜமீன் புரவிபாளையம், ஆச்சிப்பட்டி, நெகமம், பொன்முத்துநகர் உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒருவர், என, ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.கிணத்துக்கடவுகிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட, பழனிக்கவுண்டன்புதுார், சூலக்கல், சென்னியூர், கிணத்துக்கடவு, ஏழூர், பகவதிபாளையம், தாமரைக்குளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த, 14 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது. இவர்களில், ஐந்து பேர் சென்னியூரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனைமலைஆனைமலை தாலுகாவில், ஆனைமலை, கோட்டூர், வேட்டைக்காரன்புதுார் உள்பட, பத்து பகுதிகளில், நேற்று, 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் தங்கி இருந்தவர்களை தனிமைப்படுத்தி, அறிகுறிகள் உள்ளவர்களிடம் தொற்று பாதிப்பை கண்டறிய, சுகாதாரத்துறையினர் சளி மாதிரி சேகரித்துள்ளனர்.வால்பாறைவால்பாறை தாலுகாவில், வால்பாறை நகர், சோலையாறு, பன்னிமேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வால்பாறை கொரோனா சிகிச்சை மையத்தில் தற்போது, 27 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.வருவாய் கோட்டத்தில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, ஆனைமலை ஆகிய தாலுகாக்களில், 64 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.தினமும், 200க்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்பு உறுதியாகி வந்தது. தற்போது, பாதிப்போர் எண்ணிக்கை குறைந்து வருவது மக்களிடையே அச்சத்தை போக்கியுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X