மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று தடுப்பூசி முகாம் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று தடுப்பூசி முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
05:03

விழுப்புரம்-மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு விழிப்புணர்வு முகாம் ஒலக்கூர், முருக்கேரி (சிறுவாடி), கிளியனுார், மயிலம், மேல்சித்தாமூர், வளத்தி, சத்தியமங்கலம், ராதாபுரம், கெடார், கண்டமானடி, சிறுவந்தாடு, முகையூர், இருவேல்பட்டு ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்.விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் கீழ்பெரும்பாக்கம் எம்.ஆர்.ஐ.சி., உயர்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் இன்று காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை முகாம் நடக்கிறது.முகாமில் தங்களது மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் வந்து தடுப்பூசி செலுத்திகொண்டு பயனடையலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X