விரைவில்:செஞ்சி கோட்டை சுற்றுலா மையமாக்கப்படும்...'பி' ஏரியில் படகு சவாரி: அமைச்சர் ஆய்வில் தகவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
05:06

செஞ்சி-செஞ்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் செஞ்சி கோட்டையை சுற்றுலா மையமாக்கவும், 'பி' ஏரியில் படகு சவாரி விடவும் திட்டம் தயாரிக்க அமைச்சர் மஸ்தான் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.



தென் இந்தியாவில் உள்ள கோட்டைகளில் தரக்கோட்டை, மலைக்கோட்டை இணைந்து முழு அமைப்புடன் இருப்பது செஞ்சி கோட்டை. வரலாற்று சிறப்பு மிக்க செஞ்சி கோட்டையைக் காண உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.ஒவ்வொரு தேர்தலின் போதும் பிரதான கட்சிகள் செஞ்சி கோட்டை சுற்றுலா மையமாக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் சொல்ல தவறுவதில்லை.ஆனாலும் இதுவரை சுற்றுலா மையமாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. செஞ்சி கோட்டையில் உள்ள செட்டிக்குளம், சர்க்கரை குளம் மற்றும் திருவண்ணாமலை சாலையில் உள்ள 'பி'ஏரி என வாய்ப்புள்ள இடத்தில் படகு சவாரி விட வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.முதல்வர் ஸ்டாலின் செஞ்சியில் தேர்தல் பிரசாரத்தின்போது, உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா மையமாக மாற்றப்படும் என அறிவித்தார்.இதன் முதல் படியாக நேற்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் செஞ்சி கோட்டையில் ஆய்வு செய்தார்.விழுப்புரம் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் அபராஜிதன், செஞ்சி கோட்டை பராமரிப்பு அலுவலர் ஈஸ்வர், பேரூராட்சி மேற்பார்வையாளர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.ஆய்வின் போது ராஜகிரி கோட்டை வெளிப்பகுதி, செட்டிக்குளம், சர்க்கரை குளம், வெங்கட்ரமணர் கோவில், வேலுார் கேட், 'பி'ஏரி ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர்.



ஆய்வுக்குப் பின், அமைச்சர் மஸ்தான் நிருபர்களிடம் கூறியதாவது:வரலாற்று சிறப்பு மிக்க செஞ்சி கோட்டையை சுற்றுலா மையமாகவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையிலும் தரம் உயர்த்துவதற்கான திட்டம் தயாரிக்க இன்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினேன்.விரைவில் செஞ்சி கோட்டை ராஜகிரி தரைப்பகுதியை சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்கு பேட்டரி கார் வசதி செய்யப்படும்.



இந்திய தொல்லியல் துறை மூலம் ரோப் கார் வசதியும், செட்டிக்குளம், சர்க்கரை குளத்தில் படகு சவாரி விடவும், அகழிகளை துார் வாரவும் மத்திய அரசிடம் அனுமதி பெற்று திட்டம் செயல்படுத்தப்படும்.தமிழக சுற்றுலாத்துறை மூலம் 'பி' ஏரியில் படகு சவாரி விட ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். திருவண்ணாமலை சாலையில் இருந்து ஆஞ்சநேயர் கோவில், வெங்கட்ரமணர் கோவிலுக்கு புதிய தார் சாலை, வேலுார் கேட் பகுதியில் பூங்கா அமைக்கப்படும், ராஜா தேசிங்கிற்கு சிலை அமைக்கப்படும்.தகுதியான இடத்தில் நுழைவு வாயில் அமைக்கப்படும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் தமிழ்நாடு ஓட்டல் துவங்கப்படும். இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு முதல்வரின் அனுமதி பெற்று மிக விரைவில் நிறைவேற்றப்படும்.இவ்வாறு அமைச்சர் மஸ்தான் கூறினார்.இந்த ஆய்வின் போது முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் விஜயகுமார், கமலக்கன்னியம்மன் கோவில் அறங்காவலர் அரங்க ஏழுமலை, வழக்கறிஞர் மணிவண்ணன் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X