டாஸ்மாக் திறப்பை கண்டித்து பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
05:13

விழுப்புரம்-கொரோனா காலகட்டத்தில் டாஸ்மாக் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார் தனது குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில், டாஸ்மாக் கடைகள் திறக்க உத்தரவிட்ட தமிழக அரசை கண்டித்து கருப்பு கொடி, பதாகைகள் ஏந்தி பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.விழுப்புரம் பொன்அண்ணாமலை நகரில் உள்ள தனது வீட்டில், மயிலம் தொகுதி பா.ம.க., எம்.எல்.ஏ., சிவக்குமார், தனது குடும்பத்துடன் கருப்புக் கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.விழுப்புரத்தில் கட்சி அலுவலகத்தில் மாநில துணைப்பொதுச்செயலாளர் தங்ஜோதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ரிஷிவந்தியம்ரிஷிவந்தியத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க., மாநில மருத்துவரணி செயலாளர் டாக்டர் ராஜா தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் அமுதமொழி முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் வேல்முருகன், ஒன்றிய செயலாளர் மணி, நிர்வாகிகள் பிரபா, பாலா, அய்யப்பன், தனபால் உட்பட பலர் பங்கேற்றனர்.விக்கிரவாண்டிவிழுப்புரம் மத்திய மாவட்ட பா.ம.க., சார்பில் சிந்தாமணியில் நடந்த ஆர்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், குழந்தைவேல், காமராஜ், வேலு, தங்கராசு, மணிகண்டன், செந்தில் , மகளிரணி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.திண்டிவனம்சஞ்சீவிராயன்பேட்டையில் பா.ம.க., மாநில துணைத் தலைவர் ஏழுமலை தலைமையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் பால்பாண்டியன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் கருணாநிதி, முன்னாள் நகர செயலாளர் வடபழனி, வழக்கறிஞர் பாலாஜி, மலர்சேகர், சரவணன், ஜெயராஜ், இளங்கோ, ராஜீ, ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X