சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி மீன் பிடிப்பு புறக்கணிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
05:34

கடலுார்--சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கக்கோரி, கடலுார் தேவனாம்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் புறக்கணித்தனர்.மீன்பிடி தடைக்காலம் ஏப்., 15ம் தேதி துவங்கி, கடந்த 14ம் தேதி முடிவுக்கு வந்தது. தற்போது கடலுார் மாவட்டத்தில் உள்ள 49 மீனவ கிராமங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க துவங்கியுள்ளனர். மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது என, கலெக்டர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.இதற்கு குறிப்பிட்ட மீனவர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு தேவனாம்பட்டினம் மீனவர்களை அழைத்து மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர். கூட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க செல்ல தங்களுக்கு அனுமதி வழங்காவிட்டால், வரும் 20ம் தேதி வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல மாட்டோம் என்றனர்.அதன்படி கடலுார் தேவனாம்பட்டினம் பகுதி மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்க வலியுறுத்தி நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. துறைமுகப் பகுதியிலும், கடற்கரையோரத்திலும் படகுகளை நிறுத்திவிட்டு, சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்கினால் மட்டுமே மீன்பிடிக்க செல்வோம். அதுவரை மீன்பிடிக்க செல்ல மாட்டோம் என கூறிச் சென்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X