பல பெண்களுடன் தொடர்பு எஸ்.ஐ., மீது மனைவி புகார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
05:36

விழுப்புரம்-பல பெண்களை ஏமாற்றி, தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது மனைவி விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.விழுப்புரம் மாவட்டம், அவலுார்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் இளங்கோவன், 35; இவரது, மனைவி இந்துமதி, 30; இவர், நேற்று தனது பெற்றோருடன், விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் மதியம் 1:30 மணியளவில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார்.அப்போது, அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்துமதி தெரிவித்ததாவது:இளங்கோவனுடன் 2019ல் எனக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த ஐந்தே மாதத்தில் எனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.இது தொடர்பாக எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. எனது, பெற்றோரிடம் இருந்து வரதட்சணையாக 100 சவரன் நகைகளை வாங்கி வருமாறு தகராறு செய்து வந்தார்.என் பெற்றோருக்கு சொந்தமான நிலத்தை எனது கணவர் பெயருக்கு எழுதிக் கொடுத்தனர். அதை என் கணவர் 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டார்.இதை தொடர்ந்து, என்னுடன் வாழாமல் அவலுார்பேட்டையில் தங்கினார். என்னுடன் சேர்ந்து வாழ பலமுறை அழைத்தும் வரவில்லை. இது குறித்து விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் இரண்டு முறைக்குமேல் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.எனது கணவரை என்னுடன் சேர்ந்து வாழ வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கணவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு இந்துமதி கூறினார்.இளங்கோவனுடன் திருமணம் செய்து கொண்ட புகைப்படத்துடன் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு கொடுத்து விட்டு 1:45 மணிக்கு சென்றார்.இச் சம்பவத்தால் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X