வன்முறையை துாண்டும் வகையில் சுவர் விளம்பரம் எழுதிய 6 பேர் கைது | கடலூர் செய்திகள் | Dinamalar
வன்முறையை துாண்டும் வகையில் சுவர் விளம்பரம் எழுதிய 6 பேர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
05:37

நெல்லிக்குப்பம்-நெல்லிக்குப்பம் அருகே வன்முறையை துாண்டும் வகையில் சுவர் விளம்பரம் எழுதிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்அருங்குணம் ஊராட்சி தலைவராக வி.சி., கட்சியை சேர்ந்த சுபாஷ் இருந்தார். இவருக்கும் அ.தி.மு.க.,வை சேர்ந்த தாமோதரன் கோஷ்டிக்கும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் 6 மாதத்திற்கு முன் தாமோதரன் ஆதரவாளர்கள் தாக்கியதில் சுபாஷ் இறந்தார். தாமோதரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் சுபாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் சுபாஷ் கையில் பெரிய கத்தி வைத்திருப்பது போல் சுவர் விளம்பரம் எழுதி கூட்டமாக பால் அபிஷேகம் செய்தனர். வன்முறையை துாண்டும் வகையில் சுவர் விளம்பரம் செய்து, ஊரடங்கை மீறி கூட்டம் சேர்ந்ததாக சுபாஷ் ஆதரவாளர்கள் 6 பேர் மீது சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் புகார் அளித்தார்.நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து சுதாகர்,31; ரபில்தாஸ்,23; பிரவின்குமார்,26 ; கண்ணதாசன்,29; அபினேஷ்,20 ; ஸ்ரீதர்,25; ஆகியோரை கைது செய்தனர். மேலும் போலீசாரும் வருவாய் துறையினரும் இணைந்து வன்முறையை துாண்டும் வகையில் எழுதியிருந்த சுவர் விளம்பரத்தை அழித்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X