முதல் மனைவியை விரட்டிவிட்டு 2ம் திருமணம் செய்தவர் கைது | கடலூர் செய்திகள் | Dinamalar
முதல் மனைவியை விரட்டிவிட்டு 2ம் திருமணம் செய்தவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
05:38

சேத்தியாத்தோப்பு-முதல் மனைவியை விரட்டிவிட்டு ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்த நபரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த மா.கொளக்குடி கீழத்தெருவைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் முருகராஜ், 34; இவரது மனைவி சீதா, 28; இவர்களுக்கு 2010 ஜூன் 24ல் திருமணம் நடந்தது. இரு பிள்ளைகள் உள்ளனர். முருகராஜ் 2017ல் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார். அங்கிருந்து மனைவி சீதாவிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். பிள்ளைகளின் படிப்பு செலவிற்கும், குடும்ப செலவிற்கும் பணம் அனுப்புவதை நிறுத்தியுள்ளார்.இந்நிலையில், கடந்த மாதம் 10ம் தேதி வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்த முருகராஜ் மனைவி சீதாவிடம் பேசாமல் போனில் இரவு நேரங்களில் ரகசியமாக யாரிடமோ பேசிவந்துள்ளார். கடந்த 12ம் தேதி இரவு போனில் பேசுவதை கண்டித்த சீதாவை அடித்து வீட்டை விட்டு விரட்டியுள்ளார். மறுநாள் 13ம் தேதி மாலை சீதா தனது உறவினர்களை அழைத்து வந்து, முருகராஜிடம் நியாயம் கேட்டார். தான் செல்வராணி என்ற பெண்ணை கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் 13ம் தேதி திருமணம் செய்துள்ளதாக கூறினார். சீதாவுடன் குடும்ப நடந்த முடியாது என தெரிவித்துள்ளார்.இது குறித்து சீதா நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து நேற்று முருகராஜை கைது செய்தனர். செல்வராணியை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X