மாதவரம் - தரமணி மெட்ரோ பாதை உலகளாவிய ஒப்பந்த பணிகள் துரிதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
06:31

மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டத்தில், மூன்று வழித்தடங்களில் புதிய பாதை கட்டுமான பணிக்கான ஒப்பந்த ஏற்பாடு துரிதமாக நடந்து வருகிறது.



சென்னை மெட்ரோ இரண்டாவது திட்டத்தில் 61 ஆயிரத்து 843 கோடி ரூபாய் செலவில், மாதவரம் - சோழிங்கநல்லுார் இடையே 47 கி.மீ., புதிய மெட்ரோ பாதை உட்பட மூன்று வழித்தடங்களில் 118.9 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது.மூன்று புதிய பாதைகள் கட்டுமான பணிக்கு உலகளாவிய அளவில் ஒப்பந்ததாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில், மாதவரம் - சோழிங்கநல்லுார் வரை 47 கி.மீ., மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது.இப்பாதை 41.17 கி.மீ., தரைக்கு மேல் பாலத்திலும், 5.83 கி.மீ., சுரங்கத்திலும் அமைக்கப்பட உள்ளது. தரைக்கு மேல் 42 நிலையங்களும், சுரங்கத்தில் 6 நிலையங்கள் என, மொத்தம் 48 நிலையங்கள் கட்டப்பட உள்ளன.இப்பாதை மற்றும் நிலையங்கள் கட்டுமான பணிகளை விரைவாக முடிக்க ஏதுவாக பல பிரிவு களாக பிரிக்கப்பட்டு, வெவ்வேறு ஒப்பந்ததாரர்களுக்கு வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு ஒப்பந்த பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.மாதவரம் - சோழிங்கநல்லுார் மெட்ரோ பாதையில், முதல் கட்டமாக மாதவரம் - தரமணி இடையேயும், மாதவரம் - சிறுசேரி சிப்காட் மெட்ரோ பாதையில், மாதவரத்தில் இருந்து சி.எம்.பி.டி., வரையும் 52.01 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது.



இப்பாதைகளுக்கு, உலகளாவிய அளவில் ஒப்பந்ததாரர்களை நியமிக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. 2,385 கோடி ரூபாய் செலவில், மாதவரம் - சோழிங்கநல்லுார் பாதையில், கெல்லீஸ் - தரமணி ரோடு வரை 12 கி.மீ., இருவழி மெட்ரோ சுரங்கப்பாதை.சேத்துப்பட்டு, ராயப்பேட்டை, திருவான்மியூர், பசுமை வழிச்சாலை சாலையில் மெட்ரோ சுரங்க நிலையங்கள் கட்ட பிரபல தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.மீதமுள்ள பாதை மற்றும் கட்டுமான பணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒப்பந்தம் விடப்படும் பணியும் துரிதமாக நடந்து வருகிறது



. --நமது நிருபர்-

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X