அடகு நகைகளை குறிவைத்து போலி விளம்பரங்கள்... கட்டுப்படுத்தலாமே!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
06:33

சிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில் அடகு தங்க நகையை மீட்டு அதிக விலைக்கு விற்று தருவதாக கூறி போலி விளம்பரம் செய்யும் நிறுவனங்களை நம்பி பொதுமக்கள் ஏமாறும் நிலை தொடர்கிறது. இதை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



கிராமம், நகர் என எங்கும் அவசர தேவைக்கு மக்கள் தங்க நகைகளை வங்கி ,தனியார் நிறுவனங்களில் அடகு வைத்து பணம் பெறுவது வழக்கம். கொரோனா தொற்றால் பலரும் வேலைவாய்ப்பினை இழந்த நிலையில் நடுத்தர வர்க்கத்தினர், கூலி தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சிலர் வங்கியில் வைக்கப்பட்ட நகைகளுக்கு வட்டி கட்ட முடியாமலும், மீட்க முடியாமலும் சிரமப்படுகின்றனர்.



இதை பயன்படுத்தி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிலர் அடகு நகைகளை மீட்டு நல்ல விலைக்கு விற்று தருவதாக போஸ்டர்கள் மூலம் விளம்பரம் செய்கின்றனர். மார்க்கெட்டில் தங்க நகை ஒரு கிராம் விலை போலி நிறுவனங்கள் கூறும் தொகையை விட குறைவு. சாமானிய மக்கள் இந்த விளம்பரத்தை நம்பி போலி நிறுவனங்களை நாடுகின்றனர். அவர்கள் வங்கியிலிருக்கும் நகைகளை மீட்டு, தற்போது கிராம் நகை குறைந்த விலைக்குத்தான் போகிறது என கூறி மார்க்கெட் விலையை விட குறைந்த விலைக்கு நிர்ணயம் செய்கின்றனர்.



மாட்டி கொள்ளும் மக்கள் வேறு வழியின்றி கொடுக்கும் பணத்தை வாங்கி கொள்கின்றனர். விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் பெரும்பாலானவை உரிய உரிமம் இல்லாமல் செயல்படுகின்றன. இவ்வாறு போலியாக விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றும் நிறுவனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்...............



நடவடிக்கை எடுக்கலாம்




கொரோனா தொற்றில் தொழில்கள் பாதிக்கப்பட்டு பலரும் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். நடுத்தர வர்க்கத்தினர், தின கூலி வேலை செய்பவர்கள் பணக் கஷ்டத்தில் உள்ளனர். இவர்களை பயன்படுத்தி சம்பாதிக்கும் நோக்கில் சிலர் தங்க நகைக்கு அதிக விலை கொடுப்பதாக கூறி போலி விளம்பரம் செய்கின்றனர். விளம்பரத்தை நம்பி நிறுவனத்திற்கு சென்ற பின்னர் அவர்கள் நிர்ணயம் செய்வதுதான் விலையாக உள்ளது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதோடு இதன் மீது போலீசாரும் நடவடிக்கை எடுக்கலாம்.கலையரசன், பா.ஜ., நகர தலைவர், திருத்தங்கல்............

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X