தாய், மகனை வெட்டியோர் கைது | சென்னை செய்திகள் | Dinamalar
தாய், மகனை வெட்டியோர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
06:36

ஆவடி-ஆவடி, கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ், 21. கடந்த, 14ம் தேதி, தன் வீட்டிற்கு முன் நண்பர் மணிகண்டன், 23, என்பவருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல், அவர்களை அரிவாளால் தாக்கியது. தடுக்க சென்ற மகேஷின் தாய் பத்மா, 45, அண்ணன் பிரகாஷ், 29, ஆகியோரையும் தாக்கி தப்பினர்.இது குறித்து விசாரித்த, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன், 21, என்பவர் உட்பட ஏழு பேரை நேற்று கைது செய்தனர்.தலைமறைவாக உள்ள கரண் உள்ளிட்ட, மேலும் சிலரை தேடி வருகின்றனர்.விசாரணையில், கரண் முன்விரோதத்தில் மகேஷை கும்பலோடு சென்று அரிவாளால் தாக்கியது தெரிய வந்தது.போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X