சில வரி செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
06:37

மொபைல் போன் பறித்தோர் கைதுகோயம்பேடு: அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேலு, 29. இவர், கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி, 'லெமன்' வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் கோயம்பேடு மார்க்கெட்டில், இருவர் வேலுவிடம் கத்தியை காட்டி மிரட்டி, மொபைல் போன் மற்றும் 2,000 ரூபாய் பறித்து சென்றனர். இது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரித்தனர்.இந்நிலையில், கோயம்பேடு மேம்பாலம் கீழ் அமர்ந்து இருந்த இருவர், போலீசாரை கண்டதும் தப்ப முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரித்த போது, கோயம்பேட்டை சேர்ந்த பாண்டி, 23, கஜில், 22 என, தெரியவந்தது. மேலும், கத்தி முனையில் மொபைல் போன், பணம் பறித்ததை ஒப்புக் கொண்டனர். இருவரையும் கைது செய்த போலீசார், 700 ரூபாய் பறிமுதல் செய்தனர்.அ.தி.மு.க., பிரமுகர் கைதுஎண்ணுார்: எண்ணுார், பெரிய காசி கோவில் குப்பத்தைச் சேர்ந்தவர் முகேஷ், 28; மீனவர். இவர், நேற்று முன்தினம் இரவு, பஜனை கோவில் தெரு மைதானத்தில் நடந்த நண்பரின் திருமணத்தில் பங்கேற்றார். அங்கு தன் நண்பர்களான பொன்னையன், 37, ராகேஷ், 28, ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார்.அருகே அமர்ந்திருந்த நான்கு பேர், முகேஷ் மற்றும் அவரது நண்பர்களை பார்த்து கேவலமாக பேசினர். இதனால், இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இது குறித்து, எண்ணுார் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, சம்பவத்தில் தொடர்புடைய, அ.தி.மு.க., நிர்வாகியான சங்கர், 51, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.விபத்தில் முதியவர் உயிரிழப்புமதுரவாயல்: பெரம்பூரைச் சேர்ந்தவர் வாசுதேவன், 63; எல்.ஐ.சி., ஏஜன்ட். நேற்று முன்தினம் வானகரத்தில் சென்று, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மதுரவாயல் மேம்பாலம் கீழே சென்ற போது, பின்னால் வந்த லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாசுதேவன் சென்ற இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியது.இதில், சம்பவ இடத்திலேயே வாசுதேவன் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார், உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் முருகன், 47, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.மூதாட்டியிடம் செயின் பறிப்புதாம்பரம்: மேற்கு தாம்பரம், கன்னடபாளையம், தேவசகாயம் நகர், பஜனைகோவில் தெருவைச் சேர்ந்தவர், சின்னபொண்ணு, 60. இவர், நேற்று முன்தினம் மாலை, கடைக்குச் செல்வதற்காக, வீட்டில் இருந்து, புறப்பட்டு நடந்து சென்றார். அப்போது, பின்னால் வந்த, 40 வயது மதிக்கத்தக்க நபர் சின்னபொண்ணுவின், ஒன்றரை சவரன் நகையை பறித்தார். மூதாட்டியின் சத்தம் கேட்டு, மர்ம நபரை பிடிக்க பொதுமக்கள் துரத்தினர். ஆனால் பிடிக்க முடியவில்லை. இது குறித்து, தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைவியாசர்பாடி: வியாசர்பாடி, மல்லிகைப்பூ காலனியில், 5 வயது சிறுமி, இரண்டு சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதையடுத்து, அந்த சிறுமியை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார், சிறுவர்களிடம் விசாரணை நடத்தினர்.வாலிபரை தாக்கிய ஐவர் கைதுபேசின்பாலம்: புளியந்தோப்பு, சாஸ்திரி நகர், 13வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயசூர்யா, 21. இவர், நரசிம்மன் நகர், நான்காவது தெருவில் நடந்து சென்ற போது, 5 பேர் கொண்ட கும்பல், கத்தியால் தாக்கி விட்டு தப்பியது. பேசின்பாலம் போலீசார் விசாரித்து, சம்பவத்தில் தொடர்புடைய புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரி, 35 உட்பட ஐவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X