ஊரடங்கால் பொலிவிழந்த கரி உற்பத்தி; இரு மாதங்களுக்கு பின் துவங்கியது பணி | விருதுநகர் செய்திகள் | Dinamalar
ஊரடங்கால் பொலிவிழந்த கரி உற்பத்தி; இரு மாதங்களுக்கு பின் துவங்கியது பணி
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
06:41

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கால் கரி உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில், இரு மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் பணி துவங்கியது.



மாவட்டத்தில் குல்லுார்சந்தை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட ஊரக பகுதிகளில் கரி உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஓட்டல்களில் சமையலுக்கு எரிபொருளாக பயன்படுகிறது. தரிசு நிலங்களில் இருந்து பெறப்படும் சீமை கருவேல விறகுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் இந்த கரி ஒரு மூடை ரூ.700 வரை விற்கபடுகிறது.



ஊரடங்கால் டீக்கடை, ஓட்டல்கள் முழு அளவில் செயல்படாததால் விற்பனை மந்தமாக இருந்தது. மூடை ரூ.650 வரை விலை குறைந்தது. சரியான விலை கிடைக்காததால் பணிகளும் நிறுத்ப்பட்டன. தற்போது தளர்வு அறிவிக்கப்பட்டு அனைத்து பணிகளும் சீராக நடந்து வருவதால் மீண்டும் கரி மூட்டம் போடும் பணி துவங்கி உள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X