மஞ்சளாறு அணை உபரிநீர் வெளியேறிய மதகு அடைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
06:50

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை நீர் மட்டம் ஜூன் 4ல் 55 அடியாக உயர்ந்த நிலையில் உபரிநீர் நான்கு கண் மதகு வழியாக 13 நாட்களாக தேனி, திண்டுக்கல் மாவட்ட 9 கண்மாய்களுக்கு சென்றது.



நேற்று நீர் வரத்து நின்றதால் மதகு அடைக்கப்பட்டது. மஞ்சளாறு அணை மொத்த உயரம் 57 அடி. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள தலையாறு, வரட்டாறு, மூலாறு பகுதியில் மழை பெய்ததால் அணைக்கு நீர் வரத்து வந்தது. ஜூன் 4ல் நீர் மட்டம் 55 அடியாக உயர்ந்தது. அணையில் 55 அடி மட்டும் நீர் தேக்க முடியும். உபரிநீர் 13 ஆண்டுகளில் முதன் முறையாக ஜூன் 4 ல் மஞ்சளாறு அணை நான்கு கண் மதகு வழியாக தேனி மாவட்டம் செங்குளம், மத்துவார்குளம், திண்டுக்கல் மாவட்டம் கருவேலங்குளம், வீரனங்குளம், வேடங்குளம், பெரியகுளம், குன்னுவராயன்கோட்டைக்குளம், ஆலங்குளம், சிறுகுளம் உட்பட 9 கண்மாய்களுக்கு சென்றது.



கண்மாய் நீரை நம்பியிருந்த நெல், கரும்பு, விவசாயிகள் பணிகளில் ஆர்வம் காட்டினர். ஜூன் 16ல் அணைக்கு வினாடிக்கு 46 கனஅடி நீர்வந்த நிலையில் அணையின் நீர் மட்டம் 55 அடியானது. நேற்று நீர் வரத்து முழுவதுமாக நின்றது. இதனால் 13 நாட்களாக உபரிநீர் சென்ற மதகு அடைக்கப்பட்டது.அணை நீரால் தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் 5259 ஏக்கர் நிலங்கள் பாசன பயன்பெறுகின்றன.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X