செய்தி சில வரிகளில்...,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
07:08

மாணவன் மாயம்



வடமதுரை: நாடுகண்டனூரை சேர்ந்த 14 வயது சிறுவன் திண்டுக்கல் தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்தார். வடமதுரை பைபாஸ் ரோட்டில் இருக்கும் அவர்களது குடியிருப்பில் இருந்து நேற்று முன்தினம் மாலை இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றார். பின்னர் மாணவன் வீடு திரும்பவில்லை. வடமதுரை போலீசார் தேடி வருகின்றனர்.



25 பேர் மீது வழக்கு



வடமதுரை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அய்யலூரில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொரோனா ஊரடங்கு காலத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தின் மாவட்ட செயலாளர் பகத்சிங் உள்பட 25 பேர் மீது வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.



மருத்துவ கருவி வழங்கல்



பண்ணைக்காடு: ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் பண்ணைக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு மல்டி பாரா மீட்டர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. டாக்டர் சாரதியிடம் மன்றத்தலைவர் மணிகண்டன், நிர்வாகி மணிமாறன் வழங்கினர்.



தள்ளிவிட்டதில் மரணம்



ஆயக்குடி: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் அய்யனார் 30. இவர் பழநி புது ஆயக்குடி பாலசந்திரன் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தார். போதையில் இருந்த அவரை பாலசந்திரன் தள்ளிவிட்டதில் உயிரிழந்தார். -



போக்சோவில் கைது



கொடைக்கானல்: கொடைக்கானல் செண்பகனூரை சேர்ந்தவர் கண்ணன் 40, ராஜ்குமார் 31, மணிகண்டன் 22. இவர்கள் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். இது குறித்து சைல்டு லைன் அதிகாரிகள் புகார் அளித்ததின் பேரில் மூவரையும் கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த சிறுமியின் தந்தை அற்புத தேவதாஸ் 50, மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X