ரோட்டரி சார்பில் கொரோனா தடுப்பு ஊசி முகாம் | மதுரை செய்திகள் | Dinamalar
ரோட்டரி சார்பில் கொரோனா தடுப்பு ஊசி முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
14:58

மதுரை: அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பில் கொரோனா தடுப்பு ஊசி மருத்துவ முகாம் மதுரை விஸ்வநாதபுரம் ரோட்டரி ஹாலில் நடைபெற்றது.


45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது முகாமை ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் குமணன் துவக்கி வைத்தார். மதுரை அனைத்து ரோட்டரி சங்கங்களின் தலைவர் ஞான குகன், செயலாளர் மாதவன் பிரபு அழகப்பன், மதுரை ரோட்டரி சங்க தலைவர் ஆண்டனி பிரேம்குமார், ராமமூர்த்தி, தெற்கு ரோட்டரி சங்க தலைவர் கணேசன் மற்றும் அரசு தடுப்பூசி மேலாளர் ராஜேந்திரன் உதவி ஆளுநர் சாந்தாராம், ரோட்டரி மாவட்ட செய்தி தொடர்பாளர் நெல்லை பாலு, உதவி ஆளுநர் தேர்வு ரமேஷ் , அன்வர் பாட்சா உட்பட பலர் பங்கேற்றனர்.


ஐநூறுக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் முகாம் இன்றும், சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது நடக்கிறது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X