வடமாநில வியாபாரிகள் கொள்முதல்: ஜவ்வரிசி, ஸ்டார்ச் விலை உயர்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
18:20

சேலம்: வடமாநில வியாபாரிகள், சேலம் சேகோசர்வில் ஜவ்வரிசி, ஸ்டார்ச் கொள்முதலை தொடங்கியதால், அதன் விலை உயர்ந்தது.


மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பால், அந்த மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தியதால், கடந்த ஏப்ரல் முதல் வடமாநில வியாபாரிகள் ஸ்டார்ச், ஜவ்வரிசி கொள்முதலை, சேலம் சேகோசர்வில் நிறுத்திவிட்டனர். இதனால், சேலம் உள்பட, 17 மாவட்டங்களில், ஆறு லட்சத்துக்கும் மேலான ஜவ்வரிசி, ஸ்டார்ச் மூட்டைகள் தேக்கமாகி, விலை சரிந்தது. வடமாநிலங்களில் தற்போது ஊரடங்கு படிப்படியாக விலக்கப்பட்டு வருவதால், கடைகள் மீண்டும் திறந்து செயல்பட தொடங்கி உள்ளன. அதேநேரம், ஆந்திராவில் ஜவ்வரிசி, ஸ்டார்ச் விற்பனை ஏலம் தொடங்கப்படாமல் உள்ளது. இதனால், வடமாநில வியாபாரிகள், சேலம் சேகோசர்வ், மில்களில் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். ஜவ்வரிசி விலை மூட்டைக்கு(90 கிலோ), 580 ரூபாய், ஸ்டார்ச் விலை, 500 ரூபாய் நேற்று உயர்ந்தது. அதன்படி, கடந்த வாரம், ஜவ்வரிசி மூட்டை, 3,300க்கு விற்றது நேற்று, 3,880 ரூபாய், ஸ்டார்ச், 2,595க்கு விற்றது, 3,095 ரூபாயாக உயர்ந்தது. இதன் எதிரொலியாக மரவள்ளி கிழங்கு விலை டன்னுக்கு, 1,000 முதல், 1,500 ரூபாய் உயர்ந்தது. கடந்த வாரம், டன், 5,000 முதல், 7,000க்கு விற்றது, நேற்று, 6,000 முதல், 8,500 ரூபாயாக உயர்ந்தது. வடமாநில வியாபாரிகளின் கொள்முதலால், ஜவ்வரிசி, ஸ்டார்ச், மரவள்ளிக்கிழங்கு விலை உயர்ந்ததால், 17 மாவட்ட விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X