அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
23:08

திண்டிவனம் : திண்டிவனம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.



திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று கொரோனா தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் மோகன் நகராட்சி கமிஷனர் ஜகாங்கீர் பாஷா மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.



தொடர்ந்து, காவேரிப்பாக்கம் பகுதியில் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்தார். பின், ஜெயபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து, தலைமை மருத்துவர் சாந்தகுமாரியிடம், மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) செந்தில்குமார், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் விஷ்ணுகுமார், செந்தில்குமார், நகராட்சி துப்புரவு அலுவலர் மோகன், ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X