மாநில கூடுதல் பதிவாளர் ரேஷன் கடையில் ஆய்வு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
மாநில கூடுதல் பதிவாளர் ரேஷன் கடையில் ஆய்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
23:08

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ரேஷன் கடைகளில் மாநில கூட்டுறவு கூடுதல் பதிவாளர் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.



விக்கிரவாண்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் கடை எண்.1ல் மாநில கூட்டுறவு கூடுதல் பதிவாளர் லோகநாதன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது பொதுமக்களுக்கு இரண்டாம் கட்ட கொரோனா நிவாரண நிதி ரூபாய் 2,000 மற்றும் மளிகை தொகுப்பு பொருட்கள் வழங்குவதை ஆய்வு செய்தார். பின், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.விழுப்புரம் மண்டல இணைப் பதிவாளர் பிரபாகரன், மேலாண்மை இயக்குனர் நளினா, கண்காணிப்பாளர்கள் வேல்முருகன், பல்லவராஜன், வங்கி தலைவர் பூர்ணராவ், செயலாளர் மோகன்தாஸ், எழுத்தர் சீனிவாசன், விற்பனையாளர் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X