கொரோனா கட்டுப்பாட்டு அறை; கலெக்டர் மோகன் ஆய்வு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
கொரோனா கட்டுப்பாட்டு அறை; கலெக்டர் மோகன் ஆய்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
23:12

விழுப்புரம் : கொரோனா கட்டுப்பாட்டு அறை மற்றும் ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.



விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை மற்றும் ஒருங்கிணைந்த கட்டளை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், வீட்டிலிருந்து சிகிச்சை பெறுபவர்கள், மருத்துவமனைகளின் படுக்கை உட்பட அனைத்து விபரங்களும் கண்காணிக்கப்படுகிறது.இந்த மையத்தில் கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அப்போது, கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வரும் நோயளியிடம் ஆன்லைன் செயலி மூலம் காணொளி வாயிலாக, சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.தொடர்ந்து, விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டார்.சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார், நகராட்சி கமிஷனர் தட்சணாமூர்த்தி உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X