சபாஷ்! மத்திய அரசின் தேசிய திறனறி தேர்வில்... மாவட்டத்தில் 122 மாணவ, மாணவிகள் தேர்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
23:17

கள்ளக்குறிச்சி : கொரோனா தொற்றினால் கடந்த கல்வியாண்டில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், ஆசிரியர்களின் முயற்சியினால் தேசிய திறனறி தேர்வில் மாவட்டத்தில் 122 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் தேசிய திறனறி தேர்வு நடத்தப்படுகிறது.மத்திய அரசு நடத்தும் இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வீதம், 4 ஆண்டுகளுக்கு 48 ஆயிரம் ரூபாயினை அரசு வழங்குகிறது. தேர்ச்சி பெறும் மாணவர்கள் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தால் மட்டுமே ஊக்கத்தொகை கிடைக்கும்.



அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிப்பதற்காகவும், மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்துவதற்காகவும் தேசிய திறனறி தேர்வு நடத்தப்படுகிறது.மூன்று மணி நேரம் நடத்தப்படும் இந்த தேர்வு, இரண்டு கட்டங்களாக நடைபெறும். அதாவது, ஒன்றரை மணி நேரத்திற்கு மனத்திறன் தேர்வு நடைபெறும்.இதில், உளவியல் மற்றும் பொது அறிவு தொடர்பாக கேள்விகள் இடம் பெறும். தொடர்ந்து, 30 நிமிட நேர இடைவெளிக்குப்பின், படிப்பறிவு தேர்வு நடைபெறும்.



இதில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மாணவர்கள் ஓ.எம்.ஆர்., தாளில் பதில் அளிப்பர்.இந்த தேர்வில், பங்கேற்கும் மாணவர்களின் விபரங்களை முன்கூட்டியே சேகரித்து, அவர்களுக்கென தனியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.



இதையொட்டி ஒரு சில ஆசிரியர்கள் ஆன் லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி, 'வாட்ஸ் ஆப்'மூலம் வினாத்தாள் அனுப்பி அவ்வப்போது மாதிரி தேர்வுகளை நடத்தினர்.கடந்த கல்வியாண்டிற்கான தேசிய திறனறி தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி நடந்தது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 40 தேர்வு மையங்களில் 8ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 4,542 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் மாலை வெளியான நிலையில், மாவட்டத்தில் 122 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X