உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.25 லட்சத்தில் இயந்திரங்கள் வழங்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
23:22

கடலுார் : கடலுார் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ. 25 லட்சத்தில் பண்ணை இயந்திரங்களை அய்யப்பன் எம்.எல்.ஏ., வழங்கினார்.



கடலுார் மாவட்டத்தில் வேளாண் துறை மூலம் 4 ஆண்டுகளில் 23 ஆயிரத்து 300 சிறு குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து 1,165 உழவர் ஆர்வலர் குழுக்களும், 233 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. உழவர் உற்பத்தியாளர் குழு ஒன்றுக்கு பண்ணை இயந்திரங்கள் வாங்க தலா ரூ.5 லட்சம் தொகுப்பு நிதி, தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.



அந்த வகையில் 2020--21-ம் நிதி ஆண்டில் கடலுார் வட்டாரத்தில் உள்ள 5 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை இயந்திரங்கள் வாங்க ஒவ்வொரு குழுவிற்கும் தலா ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி கடலுார் செம்மண்டலத்தில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது.



நிகழ்ச்சிக்கு வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) கென்னடி ஜெபக்குமார் தலைமை தாங்கினார். வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) ரமேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர்.அய்யப்பன் எம்.எல்.ஏ.,பங்கேற்று கடலுார் வட்டாரத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான 2 நெல் நடவு இயந்திரங்கள், ஒரு வைக்கோல் கட்டும் இயந்திரம், 4 பவர் டில்லர்கள், 11 ரொட்டவேட்டர்கள் வழங்கினார்.கடலுார் தோட்டக்கலை துணை இயக்குனர் சுரேஷ்ராஜா, வேளாண் உதவி இயக்குனர் பூவராகன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X