மளிகை பொருட்கள் தொகுப்பு கிடைப்பதில்... சிக்கல்! கடலூர் மாவட்டத்தில் மக்கள் அலைகழிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
23:25

தமிழக முதல்வர் ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதியாக அரிசி கார்டுதாரர்களுக்கு ரூ. 4,000 வழங்கப்படும் என அறிவித்தார். முதல் தவணை ரூ. 2000 ஏற்கனவே வழங்கப்பட்டது.



இரண்டாவது தவணை ரூ. 2000 கடந்த 15ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. மேலும், கொரோனா ஊரடங்கையொட்டி பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க கோதுமை, உப்பு, ரவை, உளுந்து, சர்க்கரை, கடலை பருப்பு, புளி, கடுகு, சீரகம், மஞ்சள் துாள், மிளகாய் துாள், டீத்துாள், குளியல் சோப், துணி சோப் ஆகிய 14 வகை மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு அறிவித்தது.



இத்திட்டத்தை கடந்த 3ம் தேதி, தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின், மாநிலம் முழுவதும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கடந்த 15ம் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது.தாமதம்கடலுார் மாவட்டதில் 1420 ரேஷன் கடைகள் மூலம்; 7.48 லட்சம் கார்டுதாரர்களுக்கு இலவச மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது. அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கணேசன் ஆகியோர் இப்பணியை துவக்கி வைத்தனர்.



ஆனால், மளிகை பொருட்கள் தொகுப்பு ரேஷன் கடைகளுக்கு வருவதில் தாமதம் ஏற்படுவதால் பொதுமக்களுக்கு உடனடியாக வழங்க முடியவில்லை. நிவாரண நிதியாக ரூ.2,000 மட்டுமே வழங்கப்படுகிறது. நிவாரணத் தொகுப்பு வந்தவுடன் வழங்கப்படும் என்று ரேஷன்கடை பணியாளர்கள் கூறுவதால் ரேஷன் கடை பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.



இது குறித்து, வட்ட வழங்கல் துறையினர் கூறுகையில், கடலுார் மாவட்டத்திற்கு 7.48 லட்சம் கார்டுகளுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்க வேண்டியதில், இதுவரையில் 2.30 லட்சம் தொகுப்புகளே வந்துள்ளதால் வழங்கி வருகிறோம். நிவாரண நிதி முழுமையாக வந்துள்ளதால் பணத்தை வழங்கி வருகிறோம், நிவாரணத் தொகுப்பு வழங்கவில்லையென கேட்பவர்களை சமாதானம் செய்து வருகிறோம் என்றனர்.



எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, முழுமையான மளிகை பொருட்களை வரவழைத்து பொதுமக்களுக்கு விரைவாக வழங்க ஏற்பாடு செய்தால், ஒவ்வொரு பகுதியிலும் ரேஷன் கடை பணியாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X