கொத்தனார் கொலை நான்கு பேர் கைது | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
கொத்தனார் கொலை நான்கு பேர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
23:59

மரக்காணம்:பெண் தர மறுத்த கொத்தனார் தலையில் கல்லை போட்டு கொலை செய்த நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.



புதுச்சேரி அடுத்த சின்ன கோட்டக்குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார், 31; கொத்தனார். இவர் நேற்று முன்தினம் இரவு, 9:30 மணியளவில், முந்திரி தோப்பில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.கோட்டக்குப்பம் போலீசார் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நள்ளிரவில் அவர் உயிர்இழந்தார்.




போலீசார் கூறியதாவது:செல்வகுமாரின் நண்பர் குப்புசாமி, 26. செல்வகுமார் மனைவியின் தங்கை உஷாவை, திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு உள்ளார். அவருக்கு பெண் தர செல்வகுமார் மறுத்தார். உஷாவிற்கு வேறு இடத்தில் நிச்சயம் செய்து உள்ளார். இதனால், செல்வகுமார் மீது குப்புசாமிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு, செல்வகுமாரை மது அருந்துவதற்கு முந்திரி தோப்பு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.



அங்கு, நண்பர்கள் மூவருடன் சேர்ந்து, செல்வகுமார் தலையில் கல்லை போட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் செல்வகுமார் மயங்கியதால், அவர் இறந்து விட்டதாக கருதி, நால்வரும் தப்பி சென்றனர்.செல்வகுமாரின் மரண வாக்குமூலத்தின் அடிப்படையில், குப்புசாமி உள்ளிட்ட நால்வரையும் கைது செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X