கொரோனாவில் புது சவால்களை எதிர்கொள்ளும் குழந்தைகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
00:15

மதுரை : கொரோனா காலகட்டத்தில் பள்ளிக் குழந்தைகள் புதிய சவால்களை எதிர்கொள்கின்றனர். வீட்டிற்குள் அடைத்து வைப்பதன் மூலம் அவர்களின் ஆற்றல் வீணடிக்கப்படுகிறது.



மாணவர்களின் பிரச்னையை கையாளும் போது, கல்வி அதிகாரிகள் கருணையுடன் நடக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.தேனி மாவட்டம் சின்னமனுார் சுரேஷ்குமார் தாக்கல் செய்த மனு:எனது மகன் ஸ்ரீதர் ஒரு பள்ளியில் 2019-20 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு படித்தார். கொரோனா பரவலால் அரசு தேர்வு நடத்தவில்லை. பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இதற்கு தகுதியான மாணவர்களின் பெயர் பட்டியலை அரசுக்கு பள்ளி நிர்வாகம் அனுப்பியது. அதில் ஸ்ரீதர் பெயரை குறிப்பிடத் தவறியது. பள்ளியிடம் முறையிட்டோம்.



2020-21 கல்வியாண்டில் ஸ்ரீதர் பெயரை சேர்த்து அரசுக்கு அனுப்புவதாக பள்ளி உறுதியளித்தது. பொதுத் தேர்வின்றி பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு பிப்.,25 ல் அறிவித்தது. மாணவர்களின் பெயர் பட்டியலை அரசுக்கு பள்ளி நிர்வாகம் அனுப்பியது.அரசுத் தேர்வுகள் இயக்குனர், 'ஸ்ரீதருக்கு 2020-21 ல் வருகைப் பதிவு இல்லை. இதனால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது,' என நிராகரித்தார். இது அரசின் உத்தரவிற்கு எதிரானது.அனைத்துப் பள்ளிகளிலும் 2020-21ல் வருகைப் பதிவு பராமரிக்க வில்லை. வகுப்புகள் ஆன்லைனில் நடந்தன.



நிராகரித்த உத்தரவை ரத்து செய்து ஸ்ரீதர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சுரேஷ்குமார் மனு செய்தார்.நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்:பள்ளிக் குழந்தைகள் புதிய சவால்களை எதிர்கொள்கின்றனர். ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 2020-21 கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடக்கவில்லை. முழுவதும் ஆன்லைனில் வகுப்புகள் நடந்துள்ளன.ஆபத்தான வைரஸ் பரவல் காலகட்டத்தில் தேர்வு நடத்துவது சாத்தியமில்லை. ஒன்பதாவது வகுப்பு முதல் பிளஸ் 1 வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி என அறிவிக்க அரசு கொள்கை முடிவு எடுத்தது.



பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பயின்று வருவோரின் பெயர் பட்டியலை பள்ளிகளிலிருந்து பெற வேண்டும். அதன்படி தேர்ச்சி பெற்றதற்கான உரிய பதிவுகளுடன்கூடிய சான்றிதழ் வழங்க அரசு தேர்வுகள் துறை இயக்குனர் கேட்டுக் கொள்ளப்படுகிறார் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு மாணவர் முழு வருகைப் பதிவை பூர்த்தி செய்திருந்தால் மட்டுமே, அவர் தேர்ச்சிக்கான தகுதி பெற்றவராக கருதப்படுவார் என அரசின் உத்தரவில் குறிப்பிடவில்லை. எதனடிப் படையில் அரசு தேர்வுகள் இயக்குனர் கூறினார் என தெரியவில்லை. நிராகரித்தது ஏற்புடையதல்ல.


புதிய பிரச்னைகொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் பிரச்னையை கையாளும் போது, நிலைமையை புரிந்து கொண்டு கருணையுடன் கல்வி அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே மனநல டாக்டர்களிடம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போதைய கொரோனா காலத்தில் ஆலோசனை வழங்க மனநல டாக்டர்களிடம் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.தற்போது குழந்தைகள் புதிய பிரச்னையை எதிர்கொள்கின்றனர். வீட்டிற்குள் அடைத்து வைப்பதன் மூலம் அவர்களின் ஆற்றல் வீணடிக்கப்படுகிறது.



இதை ஓராண்டிற்கு மேல் இச்சமூகம் சந்தித்து வருகிறது. பிரச்னையை புரிந்து கொண்டு அதிக அன்பு செலுத்துவதன் மூலம், மன அழுத்தத்திற்கு ஆளாகவிடாமல் தடுக்க முடியும்.மனுதாரரின் மகனை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்றார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X