பாதி கட்டி நிற்கிறது பல காலம்... அந்தரத்தில் ஒரு பாலம்! முதல்வர் நினைத்தால் முடிக்கலாம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

19 ஜூன்
2021
02:54
பதிவு செய்த நாள்
ஜூன் 19,2021 02:09

கடந்த 2010ம் ஆண்டில் தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்ட பாலம், கடந்த பத்தாண்டுகளாக அ.தி.மு.க., ஆட்சியில் கண்டுகொள்ளப்படாததால், இப்போது வரை அரைகுறையாக அந்தரத்தில் நிற்கிறது.கோவை, சிங்காநல்லுார் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி ரோட்டில் உள்ள கடவு எண்: 4க்குப் பதிலாக மேம்பாலம் கட்டுவதற்கு, தி.மு.க., ஆட்சியின் இறுதிக்காலத்தில், அதாவது 2010 நவ.,10ல் அரசாணை வெளியிடப்பட்டு, 19 கோடியே 24 லட்ச ரூபாய், நிதியும் ஒதுக்கப்பட்டது.

அதற்கு அடுத்த ஆண்டில், பாலத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கின.


பாதியில் நிறுத்தம்


அந்தப் பணிகளை முறையாக முடிக்காமலே, பாலம் கட்டும் பணியைத் துவங்கியதால், நில உரிமையாளர்கள் சிலர், நீதிமன்றத்தை நாடி, 2013ம் ஆண்டில் தடை பெற்றனர். இதனால் பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டது.ஏற்கனவே, 2011-2016 அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், கோவையில் நில ஆர்ஜிதப்பணிகள் எதுவுமே நடக்காத காரணத்தால், அனைத்து வளர்ச்சிப் பணிகளும் முடங்கிக் கிடந்தன.அதில், இந்தப் பாலமும் அரைகுறையாக நின்றது. 2016ல் ஜெயலலிதா மறைவுக்குப் பின், கோவையில் பல்வேறு பிரதான ரோடுகளிலும், புதிய பாலங்கள் கட்டும் பணிகள் உட்பட, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வளர்ச்சிப் பணிகள் வேகமாக நடந்தன.


தி.மு.க.,வினர் போராட்டம்


கோவை நகரிலேயே, பல்வேறு ரயில்வே மேம்பாலங்களும் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்து விட்டன. ஆனால், இந்த பாலம் அமைந்துள்ள பகுதி, தி.மு.க.,வெற்றி பெற்ற சிங்காநல்லுார் தொகுதியில் இருந்த காரணத்தால், திட்டமிட்டே நில ஆர்ஜிதம் செய்வதில், ஏற்பட்ட தடைகள் நீக்கப்படவில்லை.இதற்கு மாவட்ட கலெக்டர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் என எல்லோரும் துணை நின்றனர். பாலம் கட்டும் பணியை வேகப்படுத்துமாறு, பொதுமக்களும், அப்போதைய தி.மு. க.,எம்.எல்.ஏ.,வும், பல கட்டப் போராட்டங்களை நடத்தினர்.


தேர்தல் வந்ததும் நிறுத்தம்


2018 டிச., 31ல், அப்போதைய அமைச்சர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில், நிர்ணயம் செய்யப்பட்ட இழப்பீடுக்கு அதிகாரிகள், நில உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டனர்.அந்த இழப்பீடை, நான்கு வாரங்களுக்குள் தர வேண்டுமென்று, 2019 பிப்., 25ல் ஐகோர்ட் உத்தரவிட்டது. அதற்குப் பின்னும் பல போராட்டங்கள் நடந்தன. எதற்கும் பலனில்லை. வேறு வழியின்றி நில உரிமையாளர்கள், ஐகோர்ட்டை நாடினர். இழப்பீட்டை 10 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று, 2020 ஜன.,7ல், ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.அதையும் உரிய காலத்துக்குள் செயல்படுத்துவதற்கு, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இறுதியாக, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தலையிட்டு, இழப்பீடு வழங்கவும் அறிவுறுத்தினார்.


தொடருமோ தொங்கல்?அதற்கான வேலைகள் நடந்து வந்த நிலையில், தேர்தல் அறிவிப்பு வந்து விட்டது. இப்போது ஆட்சியும் மாறி விட்டது. தி.மு.க., ஆட்சியில் திட்டமிடப்பட்ட பாலம், அ.தி.மு.க., ஆட்சியில் பத்தாண்டு காலமாக திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டுள்ளது.இதிலும் ஒரு சிக்கலாக, இப்போது இந்தத் தொகுதியில் அ.தி.மு.க., வென்றுள்ளது. இதனால் இந்த அரசும் பாலத்தைத் தொங்கலில் விட்டு விடுமோ என்ற அச்சம், மக்களிடம் எழுந்துள்ளது.


இந்த அரைகுறை பாலத்தால், நில உரிமையாளர்கள் மட்டுமின்றி, இந்த ரோட்டைப் பயன்படுத்தும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அரசு நினைத்தால், அடுத்த வாரமே இந்த தடைகளை நீக்கி, பாலம் கட்டும் பணியைத் துவக்கி விடலாம். இது பற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டால், 'எல்லாமே சென்னையில் தான் முடிவெடுக்க வேண்டும்' என்கின்றனர்.கோவையின் மீது தனி கவனம் செலுத்தும் முதல்வர், தொங்கல் பாலத்துக்கும் விரைவில் தீர்வு காண்பார் என்று நம்புவோம்!-நமது நிருபர்-

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
H Jothi - Delhi,இந்தியா
19-ஜூன்-202108:16:48 IST Report Abuse
H Jothi The present Govt should punish the officers who hadn’t taken action even after court ஆர்டர் as a precedent. Parties may change but government setvents are paid
Rate this:
Cancel
Arachi - Chennai,இந்தியா
19-ஜூன்-202106:04:57 IST Report Abuse
Arachi மக்களின் வரிப்பணம் வீணாக்கப்பட்டிருக்கிறது அதிமுகவால் பலத்திட்டங்களில் பாழாப்போன ஈகோவால். மதுரவாயல் டிரைப்போர்ட் கைவிட்டது. அண்ணா நூலகத்தை நீற்றுப்போக்கச் செய்தது, இந்த நூலக அமைப்பு நூல்கள் அமைக்கப்பட்டிருக்கும் வசதி, சாதாரணம் எனக்கருதப்படும் கார்பரேஷன் பள்ளிச் சிறுவர்கள்கூட எந்த தாழ்வு மனபான்மையின்றி வந்து படித்து சென்றது பார்ப்பதற்கு ஆனந்தமாக இருக்கும்.செம்மொழிப்பூங்க பாதுகாக்கப்படாமல் இருந்ததையும் பார்க்க முடிந்தது.இத்திட்டங்கள் திமுக கட்சிப் பணத்திலிருந்தா அமைக்கப்பட்டவை அல்ல. அடப்பாவிகளா வடிவேல் சொன்னது மாதிரி ஒரு ஞாயம் வேண்டாமா? இப்போம் ஓமந்துரார் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டலை எந்த நோக்கத்திற்காக கட்டபட்டதோ அதற்காக மாற்றிவிடாதீங்கனு கெஞ்சிறீங்க. மாண்புமிகு முதல் அவர்களே தயை கூர்ந்து அவர்கள் செய்த மா பாவத்தை நீங்கள் செய்யாதீர்கள். நீங்கள் நிச்சயம் செய்யமாட்டீர்கள். அம்மா உணவகத்தை பெயர் மாற்றுவதால் என்ன பயன் என்று உணர்கிறீர்கள். இது அந்த அம்மாவுக்கு இல்லாமல் போயிற்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X