மதுரை உள்பட 6 மாவட்டங்களில் கொரோனா பலி 22
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
02:24

மதுரை:மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் நேற்று கொரோனாவால் 673 பேர் பாதிக்கப்பட்டனர். 22 பேர் பலியாகினர்.



மதுரை



மதுரையில் நேற்று 160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 760 பேர் குணமடைந்தனர். 10 பேர் பலியாகினர். இதுவரை 70 ஆயிரத்து 997 பேர் பாதிக்கப்பட்டதில் 68 ஆயிரத்து 211 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி 1060. தற்போது 1060 பேர் சிகிச்சையில் உள்ளனர். 3342 ஆக்சிஜன் படுக்கைகளில் 666 பேர், 1485 சாதாரண படுக்கைகளில் 318 பேர், 670 ஐ.சி.யு.,வில் 369 பேரும், கோவிட் கேர் சென்டர்களில் உள்ள 2375 படுக்கைகளில் 266 பேரும் சிகிச்சை பெறுகின்றனர்.



மாவட்டத்தில் ஜூன் 17ல் 13 ஆயிரத்து 203 பேருக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 13 ஆயிரத்து 893 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை 6 லட்சத்து 63 ஆயிரத்து 290 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 4 லட்சத்து 32 ஆயிரத்து 794 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லுாரியில் 300, அரசு மருத்துவமனைகளில் 310, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3490, மாவட்ட சுகாதார கிடங்கில் 5630 டோஸ் தடுப்பூசிகள் இருப்பு உள்ளன.



திண்டுக்கல்



திண்டுக்கல்லில் நேற்று 104 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 233 பேர் குணமடைந்த நிலையில் 9 பேர் பலியாகினர். இதுவரை 30 ஆயிரத்து 891 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 29 ஆயிரத்து 451 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 556 பேர் பலியாகியுள்ளனர்.இன்னும் 884 பேர் சிகிச்சையில் உள்ளனர். 896 ஆக்சிஜன் படுக்கைகளில் 397, ஐ.சி.யு.,வில் 147ல் 74, 1,214 சாதாரண படுக்கைகளில் 341 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.



தேனி



தேனியில் நேற்று 129 பேரை கொரோனா தாக்கியது. 215 பேர் குணமடைந்தனர். பலி இல்லை. இதுவரை 41 ஆயிரத்து 486 பேர் பாதிக்கப்பட்டதில் 39 ஆயிரத்து 611 பேர் குணமடைந்தனர். இதுவரை 472 பேர் இறந்துள்ளனர். 1403 பேர் சிகிச்சையில் உள்ளனர்.631 ஆக்சிஜன் படுக்கைகளில் 67 பேர், 381 சாதாரண படுக்கையில் 90 பேர், 66 ஐ.சி.யு.வில் 51 பேர் சிகிச்சையில் உள்ளனர்.



ராமநாதபுரம்



ராமநாதபுரத்தில் நேற்று 67 பேர் பாதிக்கப்பட்டனர். 128 பேர் குணமடைந்தனர். பலி 2. மொத்த பலி 320. இதுவரை 19 ஆயிரத்து 188 பேர் பாதிக்கப்பட்டு 18 ஆயிரத்து 200 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 668 பேர் சிகிச்சையில் உள்ளனர்.



சிவகங்கை



சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 79 பேர் பாதிக்கப்பட்டனர். 94 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். பலி இல்லை. தற்போது 912 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை 16,767 பேர் பாதிக்கப்பட்டதில் 15,670 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி 186.மொத்த படுக்கைகள் 2137ல் ஆக்சிஜனுடன் 262, சாதாரண படுக்கையில் 213, ஐ.சி.யு.,வில் 75 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.



விருதுநகர்



விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 134 பேருக்கு கொரோனா உறுதியானது. 231 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். ஒருவர் பலியானார். இதுவரை 43,518 பேர் பாதிக்கப்பட்டதில் 41,575 பேர் குணமாகியுள்ளனர். 506 பேர் பலியான நிலையில் 1437 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.கொரோனா கேர் சென்டர்களில் உள்ள 1853 படுக்கைகளில் 262, 707 ஆக்சிஜன் படுக்கைகளில் 220, 628 சாதாரண படுக்கைகளில் 180, 143 ஐ.சி.யூ., படுக்கைகளில் 43 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.




12 பேருக்கு கரும்பூஞ்சை



கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும் கரும்பூஞ்சை தொற்றால் பாதிக்கப் படுவோர் அதிகரித்துள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் அறிகுறியுடன் 90 பேர் வரை காது, மூக்கு, தொண்டை பிரிவு மற்றும் அருகே உள்ள வார்டுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 15 பேர் குணமான நிலையில் 12 பேருக்கு கரும்பூஞ்சை பாதிப்பு உறுதியானது. மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் 37 பேர் கரும்பூஞ்சை நோயிலிருந்து குணமடைந்தனர். 23 பேர் சிகிச்சையில் உள்ளனர்.-

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X