2 பைக்குகள் மீது கார் மோதல் தாய், மகள் பலி: 5பேர் படுகாயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
02:45

திண்டிவனம்:திண்டிவனம் அருகே இரண்டு பைக்குகள் மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் தாய் மகள் இறந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.



கள்ளக்குறிச்சி மாவட்டம் பூ மலையனுாரைச் சேர்ந்தவர் செல்வம் மகன் பரமசிவம் 28; இவரது மனைவியுவந்தியா 25; மகள்கள் ஜீவா 8; அமுலு 6; நான்கு பேரும் நேற்று மதியம்சென்னையில் இருந்து பைக்கில்பூ மலையனுாருக்கு வந்து கொண்டிருந்தனர்.மதியம் 3:00 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் பஸ் நிறுத்தம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சேலத்திற்குச் சென்ற கார் பரமசிவம் ஓட்டிச்சென்ற பைக் மீது பின்னால் மோதியது.



மேலும் விழுப்புரம் அடுத்த நரையூரைச் சேர்ந்த அய்யனார் மகன் பாபு 28; என்பவர் ஓட்டிச் சென்ற பைக் மீதும் மோதியது.இந்த விபத்தில் பரமசிவம், யுவந்தியா, ஜீவா, அமுலு ஆகிய நால்வரும்மற்றொரு பைக்கில் வந்த பாபு விழுப்புரம் சக்திவேல் மகன் திருநாவுக்கரசு 15;இவரது தாய் அலிபாபு 37; ஆகிய 7 பேரும் படுகாயமடைந்தனர்.ஒலக்கூர் போலீசார் விபத்தில் சிக்கிய 7 பேரையும்மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைபலனின்றி அமுலு இறந்தார்.மற்ற 6 பேரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் செல்லும் வழியில் யுவந்தியா இறந்தார்.கார் ஓட்டுனரான சேலம் சின்னதிருப்பதியைச் சேர்ந்த கோபிநாத் 45; என்பவரை போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X