இடிச்சிட்டோம்... இப்போ இடிஞ்சி போயிருக்கோம்! வீடுகள் இல்லாமல் குண்டூர் மலை வாழ் மக்கள் தவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
03:04

மேட்டுப்பாளையம்;குடியிருந்த வீடுகளை இடித்த, குண்டூரை சேர்ந்த மலைவாழ் கிராம மக்கள், வீடுகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு, வீடுகளை கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளியங்காடு ஊராட்சியில், குண்டூர் மலைவாழ் கிராமத்தில், 34 வீடுகள் உள்ளன. பல ஆண்டுகளாக மலைவாழ் கிராம மக்கள், இங்கு வசித்து வருகின்றனர். இவர்கள் வனத்துறை சார்பில் வழங்கிய நிலத்தில், மானாவாரி விவசாயம் செய்தும், வெள்ளியங்காடு, காரமடை ஆகிய பகுதிகளுக்குச் கூலி வேலைக்கும் சென்று வருகின்றனர். இதில் கிடைக்கும் வருவாயை வைத்து, குடும்பம் நடத்தி வருகின்றனர். இவர்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு, மின் இணைப்பு வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் அரசு கட்டிக்கொடுத்த வீடுகள் பழுதடைந்ததால், மழைகாலத்தில் வீட்டுக்குள் தண்ணீர் ஒழுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மலைகிராம மக்கள், காரமடை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம், புதிதாக வீடுகளை கட்டிக் கொடுக்கும்படி கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து, இவர்களுக்கு வீடுகள் கட்ட, காரமடை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், உத்தரவு பிறப்பித்தது. இதன்பேரில், 34 வீடுகள் கட்ட ஆணை வழங்கப்பட்டது.அதனால் ஒவ்வொருவரும் தங்கள் குடியிருந்த வீட்டை இடித்துவிட்டு, விவசாய நிலங்களில், சிறிய டென்ட் அமைத்து, அதில் குடியிருந்து வருகின்றனர். மேலும் வீடுகள் இடித்து பல மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் வீடுகள் கட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எவ்வித பாதுகாப்பும் இல்லாத நிலையில், விவசாய நிலங்களில் மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். மழை பெய்தால், மக்கள் வீடுகளில் குடியிருக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.சீக்கிரம் கட்டிக் கொடுங்க...குண்டூர் மலை வாழ் மக்கள் கூறியதாவது:வெள்ளியங்காடு ஊராட்சி சார்பில், வீடுகள் கட்டிக் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்பேரில் நாங்கள் குடி இருந்த வீடுகளை இடித்தோம். வீடுகள் இடித்து ஆறு மாதங்களாகியும், வீடுகள் கட்டிக் கொடுக்க அதிகாரிகளும், ஊராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை.நாங்கள் கூலி வேலைக்கு சென்று, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வருகிறோம். இந்நிலையில் எங்களையே, வீடுகள் கட்டும்படியும், அதற்கு ஒவ்வொரு நிலையாக, பணம் தருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.முன் பணம் போட்டு, வீடுகள் கட்ட எங்களிடம் வசதி இல்லை. வீடுகள் இடிக்கப்பட்டதால் திறந்த வெளியில் சிறிய டென்ட்டுகள் அமைத்து, அதில் குடியிருந்து வருகிறோம். இரவில் இப்பகுதியில் யானைகளும், காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. அதனால் எங்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், எங்கள் குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்து, வீடுகளைக் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மக்கள் கூறினர்.ஏதாவது ஒரு வகையில்...காரமடை பி.டி.ஓ., சந்திரா கூறியதாவது:ஒவ்வொரு நபருக்கும் வீடு கட்ட தலா, 3 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வீடுகள் கட்ட நடவடிக்கை எடுத்த போது, சட்டசபை தேர்தல் வந்ததால் பணிகள் நின்றன. அவர்களே வீடு கட்டும் திட்டத்தில், இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால், மலைவாழ் மக்கள், எங்களால் வீடு கட்ட முடியாது என கூறுகின்றனர். அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளது. மேலும் ஒவ்வொரு வீடுகளிலும், மின் இணைப்பு இன்னும் துண்டிக்கப்படாமல் உள்ளது. மின்வாரிய அதிகாரிகள், மின் இணைப்பை துண்டித்த பிறகு, ஏதாவது ஒரு வகையில், வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X