கர்நாடக மது பாட்டில்கள் பறிமுதல் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கர்நாடக மது பாட்டில்கள் பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
03:05

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் அருகே விபத்தில் சிக்கிய காரிலிருந்து, கர்நாடக மாநில மதுபாட்டில்களை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைப்பற்றினர்.நேற்று முன்தினம் இரவு, இடிகரை அருகே கோயில்பாளையம், துடியலூர் ரோட்டில் கார் ஒன்று வேகமாக வந்தது. காரை ஓட்டி வந்த டிரைவர் சங்கர் குடிபோதையில், அஜாக்கிரதையாக காரை ஓட்டியதால், எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதினார்.இதில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த சம்பத்குமார், 45, சுப்பிரமணியம், 61, ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இருவரும் கோவில்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவத்தை அடுத்து விபத்து நடந்த பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்கள், காரை ஓட்டி வந்த சங்கரை தாக்கினர்.சங்கருக்கு காயம் ஏற்பட்டு, அவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காரை கைப்பற்றி, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சோதனை செய்த போது, கார் டிக்கியில், 132 கர்நாடக மாநில பிராந்தி பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. பெரியநாயக்கன்பாளையம் எஸ்.ஐ., செல்வநாயகம் வழக்குப்பதிவு செய்து, பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X