வெச்சிட்டாங்க... விதிமீறும் கடைகளுக்கு 'சீல்' | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
வெச்சிட்டாங்க... விதிமீறும் கடைகளுக்கு 'சீல்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
03:05

சூலுார்;கலெக்டர் உத்தரவு போட்டால்தான், விதிமீறும் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.சூலுார், கருமத்தம்பட்டி, இருகூர் உள்ளிட்ட புறநகர் பகுதியில் வைரஸ் தொற்று, ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஒரு நாள், 40 பேர் பாதிக்கப்பட்டால், மறுநாள், 80 பேர் என, உயரும் நிலை உள்ளது. விதிமுறைகளை முறையாக அமல்படுத்தாமல், அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதால் தான் இந்நிலை ஏற்படுவதாக பரவலாக புகார் எழுந்து வருகிறது.இது கலெக்டரின் கவனத்துக்கு சென்றது. கலெக்டர் அலுவலக மீட்டிங்குக்கு சென்ற வந்த பின், அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளில் இறங்குவது வாடிக்கையாக உள்ளது. மற்ற நேரங்களில், வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோ, விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என, கண்காணிப்பதோ கிடையாது.இந்நிலையில், நேற்று, சூலுார், இருகூர் பேரூராட்சிகளில் திடீரென அதிகாரிகள், கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி, விதிமீறிய கடை உரிமையாளர்கள், முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியை கடைபிடிக்காத பொதுமக்களுக்கு அபராதம் விதித்தனர். மளிகை, பேக்கரிகளுக்கு 'சீல்' வைத்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X