புதுமணப்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ., விசாரணை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
புதுமணப்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ., விசாரணை
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
03:21

நெகமம்:பழனி அருகேயுள்ள தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கருப்புசாமி, 30; கூலித்தொழிலாளி. ஏற்கனவே திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தையை பிரிந்து வாழ்கிறார்.சில வாரங்களுக்கு முன் நெகமம், ஜக்கார்பாளையத்துக்கு வந்த கருப்புசாமி, உறவினர் வீட்டில் தங்கி வேலைக்கு சென்றார். இச்சூழலில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த அம்சவேணி, 24, என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த, 14ம் தேதி இருவரும் வீட்டுக்கு தெரியாமல், பெதப்பம்பட்டியில் உள்ள கோவிலில், திருமணம் செய்து கொண்டு, தாசநாயக்கன்பட்டிக்கு சென்றனர்.தகவல் அறிந்த பெண் வீட்டார், இருவரையும் ஜக்கார்பாளையம் அழைத்து வந்தனர். மேலும், முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறாமல் திருமணம் செய்தது தவறு, இருப்பினும், முதல் மனைவியிடம் விவாகரத்து பத்திரத்தில், கையெழுத்து பெற்று வர பெண் வீட்டார் வலியுறுத்தினர்.இதனால் ஏற்பட்ட மனக்குழப்பத்தில், நேற்று முன்தினம், அம்சவேணி சாணிப்பவுடர் கரைசலை குடித்து இறந்தார். திருமணமான, 3வது நாளில் தற்கொலை செய்து கொண்டது குறித்து, நேற்று ஆர்.டி.ஓ., விசாரணை நடந்தது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X