சட்டவிரோதமாக மது விற்றவர் கைது | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
03:22

நெகமம்:நெகமம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 30; லாரி டிரைவர். கர்நாடகாவில் இருந்து, உடுமலை பகுதிக்கு தேங்காய் மட்டை லோடு ஏற்றி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.நேற்று முன்தினம், மட்டை பாரம் ஏற்றி கர்நாடகா சென்றார். திரும்பி வரும்போது, இரண்டு பெட்டிகளில் மதுபாட்டில்களுடன் திரும்பியவர், நெகமம் கருப்பகவுண்டர் வீதி, மறைவிடத்தில் பதுக்கி விற்பனை செய்துள்ளார்.தகவல் அறிந்த நெகமம் போலீசார், சட்டவிரோதமாக மதுவிற்ற மணிகண்டனை கைது செய்து, 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X