லாரிகளில் அதிக பாரம்: ரூ.3.42 லட்சம் அபராதம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
லாரிகளில் அதிக பாரம்: ரூ.3.42 லட்சம் அபராதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
03:22

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, தேவம்பாடிவலசு பகுதியில், அதிக பாரம் ஏற்றி வந்த ஐந்து லாரிகளுக்கு, மூன்று லட்சத்து, 42 ஆயிரத்து, 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.பொள்ளாச்சி, தேவம்பாடிவலசு தனியார் கல்குவாரியில் இருந்து, கடந்த ஒரு வாரமாக அதிக பாரம் ஏற்றிக்கொண்டு லாரிகள், கேரளாவுக்கு செல்கின்றன. நேற்றுமுன்தினம் அதிக பாரம் ஏற்றி வந்த ஐந்து லாரிகளை, பொதுமக்கள் பிடித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விசாரணை மேற்கொண்டு, வாகனங்களை பறிமுதல் செய்து அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.வட்டார போக்குவரத்து அலுவலர் கூறுகையில், ''தேவம்பாடிவலசு கல்குவாரியில் இருந்து வந்த லாரியில், அதிக பாரம் ஏற்றி வந்தது, வரி செலுத்தாதது, தமிழகத்துக்குள் வர அனுமதி பெறாதது உள்ளிட்ட விபரங்கள், விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மூன்று லட்சத்து, 42 ஆயிரத்து, 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X