சிறுமியிடம் சில்மிஷம்: போக்சோவில் முதியவர் கைது | திருப்பூர் செய்திகள் | Dinamalar
சிறுமியிடம் சில்மிஷம்: போக்சோவில் முதியவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
03:23

உடுமலை:உடுமலையில், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரை போலீசார் கைது செய்தனர்.உடுமலை அருகேயுள்ள ஆர்.ஜி.,நகரை சேர்ந்த, சின்னச்சாமி, 58. எலையமுத்துாரிலுள்ள கூட்டுறவு சங்க செயலாராக உள்ளார். அவரது வீட்டு வேலைக்கார பெண்ணின் 4 வயது மகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இது குறித்து உடுமலை, அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்து, சின்னச்சாமியை கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது:சின்னச்சாமி வீட்டில், வேலைக்கார பெண் சென்று வந்துள்ளார். பள்ளி விடுமுறை என்பதால், தனது குழந்தையையும் அழைத்துச்சென்றுள்ளார். அப்போது, குழந்தையிடம், முத்தம் கொடுப்பது உள்ளிட்ட பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்.கடந்த 15 நாட்களுக்கு முன் வேலையை விட்டு நிறுத்தியுள்ளனர். குழந்தைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சின்னச்சாமி கைது செய்யப்பட்டார்.இவ்வாறு, தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X