பிரதமர் மோடியின் பெருந்தன்மை: பா.ஜ., அண்ணாமலை பெருமிதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
03:38

கோவை;''உயர் பதவியில் இருப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை, பிரதமர் மோடியை பார்த்து அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்,'' என்று பா.ஜ., மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.கோவையில் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:'தமிழகத்தில், 'நீட்' தேர்வு நடைபெறாது; ரத்து செய்யப்படும்' என்று அறிவிப்பு வெளியிட்ட, முதல்வர் ஸ்டாலின், பிரதமரிடம் ரத்து செய்வதற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில், ஒன்றிய அரசு, ஒன்றிய பிரதமர் என்று கூறிய முதல்வர் மற்றும் தமிழக பிரதிநிதிகள், டில்லி சென்றவுடன், இந்திய அரசு, பாரத பிரதமர் என்று உச்சரிக்கின்றனர்.தமிழக அரசு சார்பில், மத்திய அரசிடம் கொடுக்கப்பட்ட கோரிக்கை மற்றும் கருத்துருவில் இந்திய அரசு, மாண்புமிகு பாரத பிரதமர் என்று குறிப்பிட்டுள்ளனர்.அதிகாரம் மிக்க பதவியில் இருந்தாலும், மற்றவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை, பிரதமர் மோடியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். தமிழக எதிர்கட்சித்தலைவராக ஸ்டாலின் இருந்தபோது தனது, 'டுவிட்டர்' பக்கத்தில், 'கோ பேக் மோடி' என்று குறிப்பிட்டிருந்தார். பிரதமர் மோடி, நாட்டின் உயரிய பதவியில் இருந்தாலும், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதுவே அவரது பெருந்தன்மை.முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று, அவருக்கு பிரதமர் நேரம் ஒதுக்கி, கருத்துக்கள் அனைத்தையும் கவனமாக கேட்டு மனுக்களை பெற்றுக்கொண்டார். பொறுப்பு மிக்க பதவியில் இருப்பவர்களுக்கு, கண்ணியமும், கடமையும் எவ்வளவு முக்கியம் என்பதை பிரதமர் மோடியை பார்த்து அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அண்ணாமலை கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஜூன்-202104:37:41 IST Report Abuse
ஆப்பு தானைத்தலைவர் வெச்ச அத்தனை கோரிக்கைகளையும் நிறைவேத்தினா பெருந்தன்மையான தலைவர்னு ஒத்துக்கலாம். ஐயாவுக்கே ஆளங்களை பாத்து நாளாச்சு. அதான் வர்ரவங்களையெல்லாம் உபசரிக்கிறாரு. அண்ணாமலை போன்றவர்கள் கொஞ்சம் மோடி ஐயாவுக்கு அழுத்தம் குடுத்தா கோரிக்கைகள் நிறைவேறும். செய்வாரா?
Rate this:
Cancel
19-ஜூன்-202103:46:28 IST Report Abuse
ஆப்பு பிரதமர் பதவியிலிருந்து கீழே இறங்குன பிறகு மோடி எப்பிடி இருப்பார்னு பாக்கத்தானே போறோம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X