சில வரி செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
05:46

வாலிபரை தாக்கிய 4 பேர் கைதுசென்னை: ராயப்பேட்டை, பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஜீஷாத், 30. நேற்று முன்தினம் அவரது வீட்டின் முன் மது அருந்திக் கொண்டிருந்த, நான்கு பேரை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த, மர்ம நபர்கள் அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.இதில் மூக்கு உடைந்த அவர், அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின் சம்பவம் குறித்து அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், தாக்குதலில் ஈடுபட்ட, ராயப்பேட்டையச் சேர்ந்த கார்த்திக், 21, விஸ்வா, 19, பரத்குமார், 19, வினோராஜ், 19 ஆகிய, நான்கு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.கொலை முயற்சி: மூவர் கைதுராயப்பேட்டை: திருவல்லிக்கேணி, பி.பி.சாலை, 3வது தெருவைச் சேர்ந்தவர் அஸ்வின் குமார், 23. இரு தினங்களுக்கு முன் இஸ்மாயில் மைதானத்தில் நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த, 7 பேர் கொண்ட கும்பல் அவரிடம் வீண் தகராறு செய்து கத்தியால் குத்த முயன்றனர்.உடனே அவரது நண்பர்கள் தடுத்து, அங்கு இருந்து அஸ்வினை அழைத்துச் சென்றனர். சம்பவம் குறித்து அஸ்வின் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்ததில், ராயப்பேட்டையைச் சேர்ந்த சந்தோஷ், 19, சூர்யா, 20, மோகன், 24 உட்பட, 7 பேர் கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று மூவரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள, நான்கு பேரை தேடி வருகின்றனர்.மனைவி மாயம்: கணவர் போலீசில் புகார்ஐஸ்ஹவுஸ்: திருவல்லிக்கேணி, குதிரைத்தலி மக்கான் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த், 27; அவரது மனைவி நந்தினி, 27. அவர், மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள, கல்யாணி மருத்துவமனையில் எழுத்தாளராக பணிபுரிந்து வருபவர்.நேற்று முன்தினம் கடைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றவர், இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பின் அவரது கணவர் உறவினர்கள், நண்பர்கள் என பலரது வீட்டில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த, ஐஸ்ஹவுஸ் போலீசார், மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.துணிக்கடையில் தீ விபத்துராயபுரம்: சென்னை, ராயபுரம், சிங்காரத்தோட்டம், 6 வது தெருவில், சிவா என்பவருக்கு சொந்தமான, துணிக்கடை உள்ளது. கொரோனா பரவல் காரணமாக, பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், இரண்டு மாதமாக கடை மூடப்பட்டுள்ளது.இந்நிலையில், பராமரிப்பு பணிக்காக, நேற்று காலை கடை திறக்கப்பட்டது. அப்போது, மின்விசிறியை சிவா போட்டுள்ளார். எதிர் பாராத விதமாக, மின்கசிவு ஏற்பட்டு, தீ விபத்து ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. இருப்பினும், புது துணிகள் சில தீயில் எரிந்து நாசமாயின.இது குறித்து, ராயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.டாக்டர்கள் போராட்டம்குரோம்பேட்டை: டாக்டர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, குரோம்பேட்டை மக்கள் விழிப்புணர்வு மையம் சார்பில், பொதுமக்கள் மற்றும் டாக்டர்களிடையே, சுமூக தீர்வு ஏற்படும் வகையில், விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.இதை தொடர்ந்து, டாக்டர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, பொதுமக்கள், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து, டாக்டர்கள் போராட்டம் நடத்தினர்.நகை மோசடி: தம்பதி மீது புகார்வியாசர்பாடி: சென்னை, வியாசர்பாடி, எம்.கே.பி., நகர், பிரபல தனியார் நிதி நிறுவன கிளையில், கவிதா, 41, பல ஆண்டுகளாக, மேலாளராக பணியாற்றி வருகிறார்.இந்த கிளையில், மார்ச், 17ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த சரவணகுமார், தங்கம் எனக்கூறி, தங்க முலாம் பூசிய, 26.4 கிராம் நகைகளை அடகு வைத்து, 83 ஆயிரத்து, 900 ரூபாய் பெற்றுள்ளார். ஏப்., 26ம் தேதி, சரவண குமாரின் மனைவி ஹேமாவதி, தங்க முலாம் பூசிய, 17.6 கிராம் நகைகளை அடகு வைத்து, 55 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று சென்றுள்ளார். போலி நகைகள் என்பதை அறிந்த தனியார் நிதி நிறுவன மேலாளர், வியாசர்பாடி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X