'ஹால்மார்க்' சான்றிதழ் வழங்கும் நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட வேண்டும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
05:47

சென்னை-'ஹால்மார்க் சான்றிதழ்கள் வழங்கும் நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட வேண்டும்' என, 'மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்' நிறுவன தலைவர் எம்.பி. அகமது கூறியுள்ளார்.தங்க ஆபரணங்களுக்கு, 'ஹால்மார்க்' முத்திரை கட்டாயமாக்கும் சட்டம், இம்மாதம், 16ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், 'மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்' நிறுவன தலைவர் எம்.பி.அகமது கூறியதாவது:தங்கத்தின் தர நிர்ணயம் குறித்து, பி.ஐ.எஸ்., வகுத்துள்ள நெறிமுறைகள் தவறாமல் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவே, 'ஹால்மார்க்' முத்திரை கட்டாயம் என, சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, தங்கத்தின் தூய்மையை சோதித்து, அதற்கேற்ப, ஹால்மார்க் சான்றிதழ்கள் வழங்க, பல்வேறு தனியார் ஏஜென்சிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இச்சான்றிதழில், பி.ஐ.எஸ்., ஹால்மார்க் லேபிளில், தங்கத்தின் துாய்மை சதவீதம், ஆபரணத்தின் பெயர் மற்றும் ஹால்மார்க் சான்றிதழ் வழங்கிய, ஏஜென்சியின் பெயர் ஆகியவை, கட்டாயமாக இடம் பெற்றிருக்க வேண்டும்.இந்த லேபிள் இருந்தால், மோசடி நிகழும் போது, சட்டத்தை அமல்படுத்தும் ஏஜென்சிகள், சுலபமாக திருடர்களை கண்டுபிடிக்கலாம். இனிவரும் காலங்களில், பி.ஐ.எஸ்., ஹால்மார்க் முத்திரையுடன், தங்க ஆபரணங்கள் மற்றும் கலை பொருட்கள் மீது, ஆறு இலக்க அடையாள எண் இடம் பெற்றிருக்கும்.மோசடி நடப்பதை தடுக்க, ஹால்மார்க் சான்றிதழ் தரும், அதிகாரம் பெற்றுள்ள அனைத்து ஏஜென்சிகளிலும், சோதனை நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X