ஜாக்டோ ஜியோ ஆசிரியர் போராட்டம் ; நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டுகோள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
05:56

சிவகங்கை, : '' ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ததற்கான ஆணையை வெளியிட வேண்டும்,'' என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஏ.முத்துப்பாண்டியன் தெரிவித்தார்.



அவர் கூறியதாவது, 2019ல் ஆசிரியர், அரசு ஊழியர்கள் இணைந்து பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை, குற்றவியல் வழக்குகள் பதிவு செய்தனர். பலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களை சம்பளமில்லா விடுமுறையாக கணக்கிட்டுள்ளனர்.இதனால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பதவி உயர்வு, தேர்வு, சிறப்பு நிலை பென்ஷன் பலன் பெற முடியாமல் பாதித்துள்ளனர்.



அப்போதைய அரசு சில துறைகளில் மட்டுமே ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்தது. ஆனால், கல்வித்துறையில் இது வரை யார் மீதும் போடப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படவில்லை. எனவே ஒழுங்கு நடவடிக்கை திரும்ப பெறப்பட்ட உத்தரவை தமிழக அரசு வழங்க வேண்டும். தமிழக அரசு ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ததற்கான ஆணையை வெளியிட வேண்டும், என்றார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X